கதிரவனுடன் இணைந்து செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்

Powered By Kathiravancom

Friday 15 August 2014

கீதாச்சாரம்!

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது

எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

உன்னுடையதை எதை இழந்தாய்,

எதற்காக நீ அழுகிறாய்?




எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?

எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?

எதை நீ எடுத்துக் கொண்டாயோ,

அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.

எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ

அது நாளை மற்றோருவருடையதாகிறது

மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.

இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்.


- பகவான் கிருஷ்ணர்



Sunday 10 August 2014

மருவத்தூர் அம்மாவே போற்றி போற்றி !

தவியாய்த்  தவிக்கும் இதயத்தின்
        தாகம்  தீர்த்திட வந்தவளே
புவிமேல் உனதருள் இல்லையெனில்
        பூவும் பிஞ்சும் தோன்றிடுமா !!
கவியாய்ப் பொழிவேன் எந்நாளும்
     





காவல் தெய்வம் நின் புகளை
செவிதான் மகிழ வாழ்வனைத்தும்
       செம்      பட்டுடுத்திய அம்மாவே !


மருவத் தூராள் எனக் கேட்டால்
   மலரும்   சிரிக்கும் தன்னாலே !
புருவம்     வியந்து  பார்த்திடவே
   பூமிப்   பந்தாய்த் தெரிபவளே
உருவம் உனது உருவமொன்றே
   உள்ளக் கதவைத் தட்டுதடி
வருவோர் போவோர் அனைவருக்கும் -நல்
   வாழ்வு  அளிக்கும் அம்மாவே ..!!


கொஞ்சும் மழலைக் குரல் கேட்டு
          கூட  வருவாய் என் தாயே
நெஞ்சம்  இனிக்க நினைவுகளில் -நீ
      நித்தம்  இருந்தால் போதுமடி
அஞ்சும்    மனநிலை மாறிவிடும்
    ஆத்தா உனதருள் கிட்டிவிட்டால்
தொஞ்சும் போக வழியுண்டோ
   தோல்வி   எம்மைத் தழுவிடினும் !


வேப்பிலைக்கு ஈடாக என்றும்
  வினைகள்        தீர்க்கும் பராசக்தி
காப்பெடுக்கும் பக்தருக்கு   நீ
  கருணை           பொழியும் மகாசக்தி !
பாப்புனைய வந்தேனே என்
  பகுத்தறிவை வளர்த்து விடு
நாப்புரளும்       போ தெல்லாம்
     நல்ல        துணை யாபவளே !!

Friday 8 August 2014

புத்தரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கையை மாற்றும் சில பாடங்கள்!!!

வாழ்க்கை, இறப்பு மற்றும் பிற விஷயங்கள் மத்தியில் வாழ்க்கையின் முடிவின்மை பற்றி புத்தர் நமக்கு ஆழமான உண்மை உளநிலையை அளித்துள்ளார். ஞானம் என்பது ஒவ்வொரு மனிதனாலும் அடையக்கூடிய ஒன்று தான் என்றும் அவர் கூறியுள்ளார்.




இந்த இடத்தில் ஞானம் என்பது மேம்படுத்த முடியாத சந்தோஷம், மனிதர்களால் அளவிட முடியாத அளவிலான உச்ச ஆனந்தம் மற்றும் மெய்யறிவு ஆகியவற்றையே குறிக்கிறது.



இன்று புத்தரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கையை மாற்றும் பாடங்களை தான் நாம் கற்க போகிறோம். புத்தரின் தவிர்க்க முடியாத சில முக்கிய புத்த மத கோட்பாடுகளை பார்க்கப் போகிறோம். அதில் புத்தர் என்ன கூற வருகிறார் என்பதையும் தெரிந்து கொள்ள போகிறோம்.

நாம் அனைவரும் அறிந்ததை போல், வாழ்க்கை என்பது கணிக்க முடியாத ஒரு இயற்பாடாகும். இறப்பு என்பது எப்போது வேண்டுமானாலும் நமக்கு ஏற்படலாம். மனிதர்களாக, ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்து கொள்ள நாம் எடுக்கும் முயற்சி முரண்பாடானது; ஆம், இறப்பின் அர்த்தத்தை தெரிந்து கொள்ள நாம் முயற்சிப்பதில், நாம் வாழும் வாழ்க்கையின் அர்த்தத்தை தெரிந்து கொள்ளாமல் போகிறோம். இருப்பினும் ஒரு கட்டத்தில் அந்த இடத்திற்கு விரைவில் வருவோம்.

இப்போதைக்கு, வாழ்க்கையை மாற்றும் சில பாடங்களைப் பற்றி புத்தரிடம் இருந்து தெரிந்து கொள்வோம். இந்த பாடங்கள் அனைத்தும் புத்தரின் சில அசைந்து கொடுக்காத கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்ததாகும். இந்த அனைத்தும் புத்த மதத்தின் அடிப்படை கொள்கையுடன் சம்பந்தப்பட்டிருக்கும். சரி, இப்போது வாழ்க்கையை மாற்றும் புத்தரின் சில பாடங்களைப் பற்றி பார்ப்போம்.

நீங்கள் செய்வதை விட என்ன செய்கிறோம் என்பதே முக்கியம்: வார்த்தைகளை விட செயல்களே அதிகமாக பேசப்படும். அதே போல் நாம் சொல்வதை விட நாம் என்ன செய்கிறோம் என்பது தான் நம் குணத்திற்கு சான்றாக விளங்கும். வாழ்க்கையில் ஏற்படும் மாற்றம் பற்றிய புத்தரின் முக்கியமான பாடம் இது.

நல்ல ஆரோக்கியத்திற்கான ரகசியம்: நல்ல ஆரோக்கியத்தை நீங்கள் அனுபவிக்க விரும்பினால், தற்போதுள்ள தருணத்தை வாழ்ந்திடுங்கள். மனதை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் முக்கியமானதாகும். நல்ல ஆரோக்கியத்தை அனுபவித்திட தற்போதைய தருணத்தை வாழ்ந்தால் தான் முடியும். புத்தர் சொல்வதை போல், "இறந்த காலம் அல்லது வருங்காலத்தில் வாழாதீர்கள், மாறாக நிகழ் காலத்தை உங்கள் வீடாக மாற்றிக் கொள்ளுங்கள்".

சில விஷயங்கள் போகட்டும்: புத்தரின் கோட்பாடுகளில் நாம் பின்பற்ற வேண்டிய முக்கியமானவைகளில் இதுவும் ஒன்றாகும். சில விஷயங்கள் போனால் போகட்டும் என விட்டு விடவில்லை என்றால், துயரம் மற்றும் மனக்கசப்பு என்ற தப்பிக்க முடியாத சுழற்சியில் மாட்டிக்கொள்வோம்.

பகிர்ந்தால் குறையாதது சந்தோஷம்: சந்தோஷத்தை பகிர்கையில் அது இரண்டு மடங்காகும். சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டால் அது குறைந்துவிடும் என்பதற்கு வாய்ப்பே இல்லை.

வெறுப்பிற்கும் இருளுக்கும் ஒரே தீர்வு - அன்பும் வெளிச்சமும்: "எப்படி இருளை ஒளியால் மட்டுமே வெல்ல முடியுமோ அதே போல் அன்பை தவிர வேறு எதனாலும் வெறுப்பை வெல்ல முடியாது" என புத்தர் கூறுகிறார்.

கருணையும்... இரக்கமும்...: புத்தரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கையை மாற்றும் பாடங்களில் மிகவும் முக்கிய பங்கை இந்த குறிப்பிட்ட ஒன்று வகிக்கிறது. நம் சொந்த புலன்களை தூய்மையாக வைத்திருக்க விரும்பினால், நாம் பின்பற்ற வேண்டியதெல்லாம் அன்பும் கருணையும் மட்டுமே.

உண்மை தானாக தன்னை வெளிப்படுத்தும்: மனிதர்களின் முயற்சி இல்லாமல் தானாக வெளிப்படும் மூன்று விஷயங்களைப் பற்றி புத்தர் கூறுகிறார் - சூரியன், சந்திரன், கடைசியாக உண்மை.

மனதை கட்டுப்படுத்தவில்லை என்றால், அது உங்களை சந்தோஷமற்ற வகையில் பயணிக்க வைக்கும்: நம் மனது நம்மை கட்டுப்படுத்தாமல், மனதை நாம் கட்டுப்படுத்துவதை, மனிதர்களாக நாம் உறுதி செய்ய வேண்டும்.

இறந்த காலத்தோடு அமைதியை ஏற்படுத்துங்கள்: இறந்த காலத்தோடு அமைதியை ஏற்படுத்தவில்லை என்றால், வருங்காலத்தில் நிம்மதியை தொலைத்து அலைய வேண்டி வரும். அதனால் இறந்த காலத்தோடு அமைதியை ஏற்படுத்தி, மன்னித்து வாழ்க்கையை தொடருங்கள்.

Sunday 3 August 2014

அன்னையார் அபிராமி உபாசகியின் பொன்மொழிகள்:

01. கணவன், மனைவி இருவரினதும் முற்பிறப்பின் தீவினைகளே இப் பிறப்பில் ஏற்படும் குடும்பப் பிரச்சனைகளுக்குக் காரணமாகும்.


02. எமது பாவ வினைகளைத் தீர்ப்பதற்கு நாம் கோயிலைக் கூட்டிக் கழுவிச் சுத்தஞ் செய்துவருதல் நன்று.


03. உங்கள் குருவானவரின் திருப்பாதங்களில் தஞ்சங் கொள்.




04. நீங்கள் குருவானவருக்குச் செய்யும் தொண்டு உங்கள் கர்ம வினைகளைத் தீர்க்கும்.


05. காலையில் தூக்கத்தில் இருந்து விழிக்கும் போதும் இறைவனிடம் அன்றைய பொழுது நல்ல பொழுதாக அமையப் பிரார்த்தனை செய்.


06. இறைவனிடம் உன் கண்ணீரால் உடல் நனையப் பிரார்த்தனை செய். உன் பிரார்த்தனை ஒருபோதும் வீண்போகாது.


07. உன் தியானம் வெற்றியளிக்க வேண்டுமானால் ஒவ்வொரு நாளும் பதினொரு தடவைகள் அபிராமி அம்மனின் தியான-மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.


08. இறைவழிபாட்டில் ஈடுபடும் போது உடலைச் சுத்தமாகவும், தூய்மையான ஆடையாகவும் அணிந்து கொள்.

09. ஒரு வாரத்தில் ஒரு நாளேனும் கோயிலுக்குச் செல்லல் வேண்டும்.

10. கோயிலுக்குச் செல்லும் போது உடல், மனம், உடைத் தூய்மை இருத்தல் வேண்டும்.


11. நீ மகிழ்ச்சியைத் தேடுகிறாயா? இறைவழிபாட்டில் ஈடுபடு! மகிழ்ச்சி அறிந்து கொள்ளப்படுவாய்.


12. நீ உன்னை உணரக் கற்றுக்கொள்!!! மகிழ்ச்சி தானே கிடைக்கும்.


13. கீட்படித்தல் என்பதும் இறைவனைக் காண்பதே.



14. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம் அணிதல் வேண்டும்.

முருகன் 108 போற்றி...!!!

1. ஓம் ஆறுமுகனே போற்றி
2. ஓம் ஆண்டியே போற்றி
3. ஓம் அரன்மகனே போற்றி
4. ஓம் அபிஷேகப்பிரியனே போற்றி
5. ஓம் அழகா போற்றி
6. ஓம் அபயா போற்றி
7. ஓம் ஆதிமூலமே போற்றி



8. ஓம் ஆவினன் குடியோய் போற்றி
9. ஓம் இறைவனே போற்றி
10. ஓம் இளையவனே போற்றி
11. ஓம் இடும்பனை வென்றவா போற்றி
12. ஓம் இடர் களைவோனே போற்றி
13. ஓம் ஈசன் மைந்தா போற்றி
14. ஓம் ஈராறு கண்ணனே போற்றி
15. ஓம் உமையவள் மகனே போற்றி
16. ஓம் உலக நாயகனே போற்றி
17. ஓம் ஐயனே போற்றி
88. ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி
19. ஓம் ஐயப்பன் தம்பியே போற்றி
20. ஓம் ஒப்பிலாதவனே போற்றி
21. ஓம் ஒங்காரனே போற்றி
22. ஓம் ஓதுவார்க்கினியவனே போற்றி
23. ஓம் அவ்வைக்கு அருளியவனே போற்றி
24. ஓம் கருணாகரரே போற்றி
25. ஓம் கதிர்வேலவனே போற்றி
26. ஓம் கந்தனே போற்றி
27. ஓம் கடம்பனே போற்றி
28. ஓம் கவசப்பிரியனே போற்றி
29. ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி
30. ஓம் கிரிராஜனே போற்றி
31. ஓம் கிருபாநிதியே போற்றி
32. ஓம் குகனே போற்றி
33. ஓம் குமரனே போற்றி
34. ஓம் குன்றம் அமர்ந்தவனே போற்றி
35. ஓம் குறத்தி நாதனே போற்றி
36. ஓம் குணக்கடலே போற்றி
37. ஓம் குருபரனே போற்றி
38. ஓம் சங்கரன் புதல்வனே போற்றி
39. ஓம் சஷ்டி நாயகனே போற்றி
40. ஓம் சரவணபவனே போற்றி
41. ஓம் சரணாகதியே போற்றி
42. ஓம் சத்ரு சங்காரனே போற்றி
43. ஓம் சர்வேஸ்வரனே போற்றி
44. ஓம் சிக்கல்பதியே போற்றி
45. ஓம் சிங்காரனே போற்றி
46. ஓம் சுப்பிரமணியனே போற்றி
47. ஓம் சரபூபதியே போற்றி
48. ஓம் சுந்தரனே போற்றி
49. ஓம் சுகுமாரனே போற்றி
50. ஓம் சுவாமிநாதனே போற்றி
51. ஓம் சுகம் தருபவனே போற்றி
52. ஓம் சூழ் ஒளியே போற்றி
53. ஓம் சூரசம்ஹாரனே போற்றி
54. ஓம் செல்வனே போற்றி
55. ஓம் செந்தூர் காவலனே போற்றி
56. ஓம் சேவல் கொடியோனே போற்றி
57. ஓம் சேவகனே போற்றி
58. ஓம் சேனாபதியே போற்றி
59. ஓம் சேனைத்தலைவனே போற்றி
60. ஓம் சொற்பதம் கடந்தவனே போற்றி
61. ஓம் சோலையப்பனே போற்றி
62. ஓம் ஞானியே போற்றி
63. ஓம் ஞாயிறே போற்றி
64. ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
65. ஓம் ஞான உபதேசியே போற்றி
66. ஓம் தணிகாசலனே போற்றி
67. ஓம் தயாபரனே போற்றி
68. ஓம் தண்டாயுதாபாணியே போற்றி
69. ஓம் தகப்பன் சுவாமியே போற்றி
70. ஓம் திருவே போற்றி
71. ஓம் திங்களே போற்றி
72. ஓம் திருவருளே போற்றி
73. ஓம் திருமலை நாதனே போற்றி
74. ஓம் தினைப்புனம் புகுந்தோய் போற்றி
75. ஓம் துணைவா போற்றி
76. ஓம் துரந்தரா போற்றி
77. ஓம் தென்பரங்குன்றனே போற்றி
78. ஓம் தெவிட்டா இன்பமே போற்றி
79. ஓம் தேவாதி தேவனே போற்றி
80. ஓம் தேவை அருள்வாய் போற்றி
81. ஓம் தேரேறி வருவோய் போற்றி
82. ஓம் தேசத் தெய்வமே போற்றி
83. ஓம் நாதனே போற்றி
84. ஓம் நிலமனே போற்றி
85. ஓம் நீறணிந்தவனே போற்றி
86. ஓம் பரபிரம்மமே போற்றி
87. ஓம் பழனியாண்டவனே போற்றி
88. ஓம் பாலகுமரனே போற்றி
89. ஓம் பன்னிரு கையனே போற்றி
90. ஓம் பகை ஒழிப்பவனே போற்றி
91. ஓம் பிரணவமே போற்றி
92. ஓம் போகர் நாதனே போற்றி
93. ஓம் போற்றப்படுவோனே போற்றி
94. ஓம் மறைநாயகனே போற்றி
95. ஓம் மயில் வாகனனே போற்றி
96. ஓம் மகா சேனனே போற்றி
97. ஓம் மருத மலையானே போற்றி
98. ஓம் மால் மருகனே போற்றி
99. ஓம் மாவித்தையே போற்றி
100. ஓம் முருகனே போற்றி
101. ஓம் யோக சித்தியே போற்றி
102. ஓம் வயலூரானே போற்றி
103. ஓம் வள்ளி நாயகனே போற்றி
104. ஓம் விராலிமலையானே போற்றி
105. ஓம் விநாயகன் சோதரனே போற்றி
106. ஓம் வினைகளைக் களைவாய் போற்றி
107. வேலவனே போற்றி
108. ஓம் வேத முதல்வனே போற்றி போற்றி

அருணாசலம் என்பதன் பொருள்

1. இறைவன் இறைவிக்கு இடபாகம் அளித்த தலம்….
திருவண்ணாமலை


2. கார்த்திகை தீபத்திருளில் அவதரித்த  ஆழ்வார்….
திருமங்கையாழ்வார்





3. திருவண்ணாமலையில் கார்த்திகை
தீபத்திருநாளன்று காலையில் ஏற்றும் தீபம்….
பரணிதீபம் (அணையா தீபம்)
4. அருணாசலம் என்பதன் பொருள்…
அருணம்+ அசலம்- சிவந்த மலை


5. ஆறாதாரங்களில் திருவண்ணாமலை…
ஆதாரமாகத் திகழ்கிறது மணிபூரகத் தலம்

6. திருவண்ணாமலையில் பவனிவரும்
சோமஸ்கந்தரின் பெயர்…
பக்தானுக்ரக சோமாஸ்கந்தர்


7. “”கார்த்திகை அகல்தீபம்” என்னும் அஞ்சல்
முத்திரை வெளியான ஆண்டு…
1997, டிசம்பர் 12
 

8. அருணகிரிநாதர் கிளிவடிவில் முக்தி பெற்ற இடம்…
திருவண்ணாமலை (கிளி கோபுரம்)


9. கார்த்திகை நட்சத்திரம் ….தெய்வங்களுக்கு உரியது
சிவபெருமான், முருகப்பெருமான், சூரியன்


10 குறைந்தபட்சம் விளக்கு ஏற்ற வேண்டிய காலம்…..
24 நிமிடங்கள் (ஒரு நாழிகை)

ஸ்ரீ அபிராமி உபாசகி அம்மையாரின் வரலாறு! (Video)

ஓம் சக்தி
 அம்மா அவர்கள் வட தமிழ் ஈழத்தில் அழகுக்கு அழகு சேர்க்கும் இயற்கை வளம் நிறைந்த ஏழாலை என்னும் ஊரில் திருநாவுக்கரசு – மகேஸ்வரி தம்பதிகளுக்கு செல்வப்புதல்வியாக அவதரித்து லலிதாம்பிகை என நாமம் பூண்டிருந்தார்



கள்ளம் கபடமற்ற தூய உள்ளத்தினளாக இருந்த சிறுமியின் உள்ளத்தில் சின்னஞ் சிறு வயதிலியே தெய்வாம்சங்கள் குடிகொண்டிருந்தன. அபிராமி அம்பாள் நெஞ்சில் அமர்ந்து கொண்டதற்கான அறிகுறிகள் தென்படலாயின
 சிறு பராயத்தில் குழந்தையை நீராட்டும்போது கண்களால் பார்க்க முடியாத அளவுக்கு கண்ணைப் பறிக்கும் வித்யாசமான ஒளி வீசுவதாகவும் தாயார் மகேஸ்வரி உணர்ந்தார். அதன் பின் மகேஸ்வரி அம்மையார் பெற்ற நான்கு குழந்தைகளுக்கும் இவருக்கும் இடையில் நிறைய வித்யாசம் இருப்பதையும் கண்ணுற்றார். வெளியில் கொண்டு செல்லும் போதும் மற்றவர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒளி வீசியதாக தாயார் உணர்ந்துள்ளார்.


இப்படியாக பாசத்துடனும் அன்புடனும் வளர்க்கப்பட்ட லலிதாம்பிகை அம்மையார் கல்வி அறிவும் மிகுந்து காணப்பட்டார். வயது வளர வளர அடிக்கடி கோவிலுக்கும் போகும் பழக்கம் அதிகரித்துக் கொண்டே வந்தது. தினந்தோறும் இல்லாவிட்டாலும் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளிலாவது கோவிலுக்கு சென்று மிகுந்த பக்தியுடன் வணங்கிவிட்டு கோவில் பிரசாதமும் கொண்டு வீட்டுக்கு வருவார்.

வீட்டில் தனது தாயாருடன் சேர்ந்து தங்கள் பூசையறையில் தோத்திரங்கள் பாடியும் விசேட தினங்களில் படையலுக்குத் தேவையான பலகார வகைகள் செய்து படைத்தும் இறை பக்தியில் மிகுந்த காணப்பட்டார். அவருக்குக் கிடைக்கும் ஓய்வான நேரங்களில் தெய்வ நாமம் உச்சரிப்பதையும் தெய்வ சிந்தனையில் ஈடுபடுவதையும் சின்ன வயதிலேயே ஏற்படுத்திக் கொண்டார்.
இளவயதிலேயே நிறைவான கல்வியையும் முiறையான பண்புகளையும் விரும்பிக்கற்று வந்ததால் அவற்றை வாழ்க்கையில் தவறாமல் கடைப்பிடித்து வந்தமையும் அவரது குடும்பத்தில் மேலோங்கிக் காணப்பட்ட நற்பண்புகளாகும்.

இவர் 9 வயது சிறுமியாக இருந்தபோது அபிராமி அம்மனால் ஆட்கொள்ளப்பட்டார். மனித உருவில் அவதரித்த அபிராமி அம்பாள் தான் மாதாஜி அபிராமி உபாசகி என்பில் ஐயமேதுமில்லை.


இப்படி வளர்ந்து வருகையில் ஒன்பதாவது வயதில் மாதாஜி அவர்களுக்கு கனவில் அபிராமி அம்மன் தோன்றி 'நான் உன்னிடம் வருவேன்' என்றும் 'என்னை ஆதரிக்க வேண்டும' என்றும் கூறினார். திருமண காலத்தில் இவருக்கேற்ற ஒரு வாழ்க்கைத்துணையை அபிராமி அம்மாள் தேர்ந்தெடுத்து மணமுடித்து வைத்தார். இவர்களுக்கு பாலமுருகன் போல ஒரு ஆண் குழந்தையையும் அந்த அபிராமி அம்மாள் கொடுத்தார்.
அம்மா டென்மார்க் நாட்டில் (1994) இருக்கும் போது அபிராமி அம்மன் அம்மாவின் கனவில் வந்து தன்னை நீ ஆதரிக்கவேண்டும் என்று அடிக்கடி கேட்டுக் கொண்டார்.

அம்மாவினால் முதலில் ஏற்றுக்கொள்வது கஷ்டமாக இருந்தது. ஆனால் ஒரு நாள் திடீரென்று அம்மாவின் உடலில் அம்பாள் வந்து அமர்ந்து கொண்டுவிட்டார். அம்மா அவர்கள் தன்னையறியாமல் அருள்வாக்குக் கூறத் தொடங்கிவிட்டார். அது மட்டுமல்ல 5 நாட்கள் அம்மா சுயநினைவின்றி தன்னை மறந்த தெய்வீக நிலையில் இருந்தார். அச்சமயத்தில் மக்களுக்கு விபூதி கொடுத்து மக்களின் நோய்களையும் தீர்த்தார். சுயநினைவு வந்தவுடன் அம்மா அவர்கள் தான் அபிராமி அம்மனாக வாழந்து மக்களை இவ்வுலக துன்பங்களிலிருந்து காப்பாற்றி அவர்களை நல்ல நிலையில் வாழவைப்பேன் என்று சொல்லி தன் வாழ்க்கையை ஆன்மீக வாழ்க்கையாக மாற்றி மக்களுக்காக அர்ப்பணித்தார்.

ஆரம்ப நாட்களில் அம்மா அவர்கள் தங்கள் சொந்த வீட்டில் ஒரு அறையில் தெய்வங்களின் திருவுருவப் படங்களை வைத்து பூசைகள் செய்யத் தொடங்கினார். நாளுக்கு நாள் அம்மாவின் அற்புதங்கள் வெளியே பரவத் தொடங்கின. தன்னை நாடி வரும் மக்களுக்கு அருள்வாக்கு சொல்லத் தொடங்கினார் அம்மா. ஒரு நாள் திடீரென அம்மா நாக தெய்வத்தைப் போல நிலத்தில் விழுந்து உருண்டு வளைத்து தன் உடம்பை வருத்தினார்.
அங்குள்ள மக்கள் எல்லோரும் பயபக்தியுடன் அம்மாவின் அருகே நின்று


அரோகரா சொல்லத் தொடங்கிவிட்டார்கள். அம்மாவின் வாயிலிருந்து உதிரம் கொட்ட இரண்டு மாணிக்கக்கற்களை அம்மா உமிழ்ந்து எடுத்தார். முதல் மூன்று நாட்களாக அம்மா எதுவுமே சாப்பிடாமல் கஷ்டப்பட்டார். வாயில் இருந்து வயிற்றுப்பகுதி வரை மிகவும் வலியினால் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார். ஆங்கே வரும் தொண்டர்கள் அம்மாவிற்கு பால் பழங்களை அருந்த வைத்தார்கள். 3 நாட்களின் பின் அம்மாவின் உடல்நிலை பழைய நிலைக்கு வந்துவிட்டது. மக்கள் இந்த அற்புதங்களை அறிந்ததும் அம்மாவிடம் நேரில் வந்து ஆசி பெற்றுச் சென்றார்கள்.

சிறிது காலத்தின் பின் அபிராமி அம்மாள் தனக்கென்று ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அமரவேண்டும் என்று நினைத்தார். அதன் பிரகாரம் அம்மா அவர்கள் அம்மாளின் நிலையில் இருந்து தொண்டர் ஒருவரை அழைத்து ஒரு திசையைக் குறிப்பிட்டு ஒரு இடம் கட்டிடத்துடன் விற்பதாக இருக்கின்றது. அங்கே ஒரு மரம் ஒன்று அதன் அடியில் பொந்து இருப்பதாகவும் கூறினார். அங்கே தான் நான் அமரப்போகின்றேன் என்றும் அந்த இடத்தை உடனே போய் பார்க்கும்படி அருள்வாக்கு மொழிந்தார். அன்று பிற்பகல் கிடைத்த பத்திரிகையில் அந்த இடம் விற்பனைக்குப் போடப்பட்டிருப்பதைக் கண்டு அவர்கள் வியப்டைந்தனர். அம்மாவின் அருள் வாக்கின்படி அந்த இடத்தில் ஒரு மரமும் அதன் அடியில் ஒரு பொந்தும் இருப்பதைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டனர். சில நாட்களின் பின் அந்த நிலம் அபிராமி அம்மாவிற்குச் சொந்தமாகியது.

பங்குனி உத்தரத் திருநாளில் வேப்பம் பீடம் ஒன்றை வைத்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. அத்துடன் நாக பாம்பொன்றில் மாணிக்கக்கற்களை பதித்து மூலஸ்தானத்தின் வலப்பக்கத்தில் அமர்த்தி அபிஷேகங்கள் நடத்தினார் ஆன்மீகத் தாய் அபிராமி அம்மா.

ஆன்மீகத் தாய் அபிராமி ஆரம்பகாலத்தில் பச்சை நிற புடவை அணிந்திருந்தார். காலம் செல்லச் செல்ல அம்மாவின் மனதில் காவியுடை தரித்து வாழவேண்டும் என்று அவருக்கு ஏற்பட்டது. அம்மாவின் வாக்குப்படியும் அம்பாளின் உத்தரவின்படியும் ஆன்மீகத் தாய் அபிராமி காவியுடைதரித்தார்.

காவியுடை தரித்த நாள் மிகவும் விசேடமான விழாவாக அம்மாவின் ஆலயத்தில் நடைபெற்றது. காலை 11.00 மணியளவில் அம்மாவை பச்சை நிற ஆடையுடன் அமரச் செய்து அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பெண் தொண்டர்கள் அம்மாவை அழைத்து சென்று காவியுடைதரித்து கழுத்திலும் கைகளிலும் உத்திராட்ச மாலைகள் அணிவித்து நெற்றியில் பெரியதாக குங்குமத்திலகமிட்டு அம்மாவை ஆலயத்தினுள் அழைத்து வந்தார்கள். இக்காட்சியை பார்த்த பக்தர்கள் எல்லோரும் கண்ணீர் விட்டு அழத்தொடங்கிவிட்டார்கள். அம்மாவின் கணவரும் அன்றைய தினத்தில் அவரின் மனவிருப்பத்துடன் காவியுடையை ஏற்றுக்கொண்டார். அன்றிலிருந்து லௌகீக வாழ்க்கையைத் துறந்து ஆன்மீக வாழ்க்கையை ஏற்றுக்கொண்டார்கள். காவியுடையை அணிந்து சில நாட்களின் பின்னர் தலையின் நடுப்பகுதியில் முடியினை முடிந்து உத்திராட்ச மாலையினால் முடியை அலங்கரித்தார்.

சில காலத்தின் பின்னர் அம்மா அவர்கள் கச்சைக்கட்டுடன் நெற்றியில் குங்குமத்தினால் சூலம் கீறி அத்துடன் 2 தோள்கன் மேல் கைகளிலும் சூலம் கீறி அம்மாளின் முன் 3 நாட்கள் தியானத்தில் அமர்ந்து விட்டார். 3 நாட்களின் பின்னர் கச்சைக்கட்டுடன் மேலே சால்வை போர்த்துக் கொண்டு உடையில் மாற்றத்தைக் காட்டினார்.

காவியுடைதரித்து கழுத்தில் மலர் மாலையும் தலையில் கிரீடமும் கையில் சூலமும் கொண்ட அம்மாவைப் பார்க்கும்போது பக்தர்கள் மெய்மறந்து நிற்பார்கள். மனதில் உள்ளன்புடனும் நம்பிக்கையுடனும் அம்மாவை பார்ப்பவர்களின் கண்களுக்கு அம்மனாக காட்சியளிப்பார். அம்மாவை தெய்வமாக ஏற்று நம்பிக்கையுடனும் உறுதியுடனும் வழ்பவர்களுக்கு ஆதிபராசக்தியாக காட்சியளிப்பார்.

                                                        ஓம் சக்தி

டென்மார்க்: Phone: 0045 97180192
Mobile: 0045 40413431
Fax: 0045 97184192


வங்கி: Nordea Bank,
S . W . I  .F . T . N  D E A D K  K K
DK No.: 2420 0008 0161 4361
Account No.: 9559 080 1614 361

விநாயகனுக்கு எத்தனை வடிவங்கள்…

பிரபஞ்ச சக்தி,காத்தல் சக்தியின் உருவ விளக்கம்தான் விநாயகர்.பூமி, காற்று, நெருப்பு,நீர்,வானம் ஆகிய பஞ்சபூதங்களின் முழ வடிவம்தான் இந்த ஐங்கரன். அவருக்கு ஐந்து கைககள்.`ஒரு கை த்னக்கும்,ஒரு கை தேவர்களுக்கு, ஒரு கை பெற்றோர்களுக்கு,இரு கைகள் நம்மைக் காக்க’என்று தணிகைப் புராணத்திலே சொல்கிறார் கச்சியப்ப முனிவர்.





கடவுள்களுக்கும் பட்டங்கள் உண்டு. சிவனுக்கு `ஆல் அமர் செல்வன்’ கண்ணனுக்கு, `ஆலிலைப் பாலன்’ விநாயகனுக்கு ஆலமர அல்லது அரசமரத்தடி பிள்ளையார் என்று உண்டு. பல்வேறு வடிவங்களில் இவரை வழிபடுவார்கள். மகா கணபதி,ஹரித்ரா கணபதி அல்லது துந்திராஜ கணபதி, உச்சிஷ்ட கணபதி,நவநீதி கணபதி, ஸ்வர்ண கணபதி, சந்தான கணபதி என்கிற ஆறு வடிவ்ங்களில் வழிபாடுகள் உண்டு.

முத்கல புராணம் விநாயகரின் எட்டு அவதாரங்களையும்,முப்பத்திரண்டு திருவுருவங்களையும் விவரிக்கிறது. எட்டு அவதாரங்கள் என்பது மனிதர்களின் எட்டு பலவீனங்கள் அல்லது அசுர குணங்களை குறிக்கும். அகந்தையை வெல்லும் ஏகதந்தர்,செருக்கை அகற்றும் தும்ரவர்ணர்,பொறாமையை அழிக்கும் வக்ரதுண்டர்,மோகத்தை அடக்கும் மகோதரர்,பேராசையை நீக்கும் கஜானானர்,கோபத்தை குறைக்கும் லம்போதரர், காமத்தை விலக்கும் விடர்,தற்பெருமையை தணிப்பது விக்னராஜா.

முப்பத்திரெண்டு திருவுருவங்கள்:

1.ஸ்ரீபால விநாயகர் “- குழந்தை வடிவம், யானைத்தலை; பொன்னிற மேனி;நான்கு கைகளில் ஒன்றில் வாழைப்பழம்,ஒன்றில் மாம்பழம்,ஒன்றில் கரும்பு, ஒன்றில் பலாப்பழம்,துதிக் `கை’யில் அவருக்கு பிடித்த கொழக்கட்டை.

2.ஸ்ரீ தருண விநாயகர் : இளமை பொங்கும் அழகிய இளைஞனாக,ஒடிந்த தந்தம்,விளாம்பழம், கரும்புத்துண்டம், அங்குசம், பாசம், நெற்கதிர்,நாவற்பழம்,மோதகம் தாங்கிய எட்டு கைகளும் கொண்ட சிவந்த மேனியர்.

3.ஸ்ரீ பக்தி விநாயகர் : அறுவடை கால முழ நிலவு போல் ஒளிரும் சாம்பல நிற மேனியர்; வாழைப்பழம், மாம்பழம்,தேங்காய்,கிண்ணம் நிறைய பாயசம் கொண்ட நான்கு கைகள்.

4.ஸ்ரீ வீர விநாயகர் : வல்லமை வாய்ந்த மாவீரர் போல் அனைவரையும் கவர்ந்தீர்க்கும் வகையில், நின்ற நிலையில் அம்பு அங்குசம், மழ, குந்தாலி, சம்மட்டி, சூலம்,வாள்,சக்கரம், சங்கு, கேடயம், கதை, கொடி, பாசம், நாகம், வேல்,வில் கொண்ட பதினாறு கரங்கள் கொண்ட சிவந்த மேனி.

5.ஸ்ரீ சக்தி விநாயகர் : தனது சக்தியரில் ஒருவ்ரை மடியில் அமர்த்தி இடது கீழ்க்க்கரத்தால் அணைத்த வண்ணம் உட்கார்ந்த நிலையில் அங்குசம் பாசம் ஏந்தி வலது கீழ்க்கரத்தால் அபயம் அளிக்கும் நான்கு கரமுடைய ஆரஞ்சு சிவப்பு மேனியர்.

6.ஸ்ரீ துவிஜ விநாயகர்: நான்கு முக வெண்ணிலவு வண்ண மேனி, அக்கமாலை,தண்டம், கமண்டலம்,ஏடு ஏந்திய நான்கு கரங்கள்.

7.ஸ்ரீ சித்தி விநாயகர்: எடுத்ததை முடித்து வைக்கும் பொன் மஞ்சள் நிற மேனி,மாம்பழம்,பாசு,கரும்புத்துண்டம், மலர்க்கொத்து கொண்ட நான்கு கரங்கள்,துதிக்கையில் எள்ளுருண்டை.

8.ஸ்ரீ உச்சிஷ்ட விநாயகர்: பேரின்பம் அருளும் பண்பாட்டு காவலர், நீல நிற மேனி, தனது சக்தியுடன் வீற்றிருக்கும் இவர் அக்கமாலை, மாதுளம் பழம், வஜ்ஜிர திரிசூலம், நீலோற்பலம், நெற்கதிர், வீணை தாங்கிய ஆறு கரங்கள்.
9.ஸ்ரீ ஷிப்ர விநாயகர்: வரந்தரு விநாயகரான இவர் தந்தம், அங்குசம், பாசம், கற்பகக்கொடி நான்கு கரங்களில் தாங்கியிருப்பார் துதிக்கையில் இரத்தின கும்பம் கொண்ட வண்ன மேனி.

10.ஸ்ரீ விக்ன விநாயகர் : விக்கினங்களின் அதிபதி. தந்தம், மலரம்பு, பரசு, சக்கரம், சங்கு, பாசம், கரும்புவில், பூங்கொத்து ஏந்திய எட்டு கரங்கள். துதிக்கையில் கொழக்கட்டையை வைத்திருக்கும் பொன்னிற மேனி.

11.ஸ்ரீ ஹரம்ப விநாயகர்: சிங்கவாகனத்தில் அமர்ந்திருக்கும் ஐந்து முக வெண்ணிறமேனி.அபயகரம்,தந்தம்,மலர்மாலை,அக்கமாலை,சுத்தி, பாசம், பழம், கதை, கொழக்கட்டை கொண்ட பத்து கரம்.

12.ஸ்ரீ லட்சுமி விநாயகர்: வெற்றியைத் தருபவர்; நீல மலர் ஏந்திய இருதேவியர்களுடைய தூய வெண்ணிற மேனியர்; பச்சைக்கிளி, மாதுளம் பழம், வாள், அங்குசம், பாசம், கற்பகக் கொடி, மாணிக்கக்கும்பம், வரம் தரும் கரம் கொண்ட எட்டு கரங்கள்.

13.ஸ்ரீ மகர விநாயகர்: மூன்று கண்களுடன் நெற்றியில் பிறைச் சந்திரன் ஒளிர, சிவப்பு வண்ணத்தோற்றம். தந்தம், மாதுளம்பழம், நீலோற்பலம், நெற்கதிர், சக்கரம், பாசம், தாமரை, கரும்புவில், கதை ஆகியவற்றைத் தாங்கிய ஒன்பது கரங்கள், தாமரை எந்திய கையுடன் கூடிய சக்தியை பத்தாவது கையில் தழவிக்கொண்டு துதிக்கையில் ரத்தின கலசம்.

14.ஸ்ரீ விஜய விநாயகர்: மூஷிக வாகனத்தில் அமர்ந்திருக்கும் வெற்றியைத் தரும் செந்நிற மேனி, தந்தம், அங்குசம், பாசம், மாம்பழம் தாங்கிய நான்கு கரங்கள்.

15.ஸ்ரீ நிருத்திய விநாயகர்: ஊன்றிய இடது கால்,தூக்கிய வலது கால், கற்பக விருட்சத்தனடியில் ஆனந்த நடனமாடும் பொன்னிற மேனி. தந்தம், அங்குசம், அபிநயம் காட்டுவது போலுள்ள உயர்த்திய கையிலே பாசம், கொழக்கட்டை கொண்ட நான்கு கரங்கள்.

16.ஸ்ரீ ஊர்த்துவ விநயகர்: இடது மடியில் அமர்ந்திருக்கும் பச்சை நிறமுடைய தேவியை அணைத்த வண்ணமுள்ள பொன்னிற மேனி. தந்தம், அம்பு, செங்கழநீர்மலர், நெற்கதிர், கரும்புவில்,தாமரை மலர் கொண்ட ஆறு கரங்கள்.

17.ஸ்ரீ ஏகாட்சர விநாயகர்: பிறை சூடி, முக்கண்ணனுடன் செம்பட்டுடையும், செம்மலர் மாலையும் அணிந்து குட்டைக் கைகால்களை கொண்டு பத்மாசன நிலையில் மூஷிக வாகனத்தில் அமர்ந்திருக்கும் செந்நிற மேனி, மாதுளம் பழம், அங்குசம், பாசம், கொண்ட நான்கு கரங்கள்.

18.ஸ்ரீ வரத விநாயகர்: வரம் தரும் பிறைசூடிய முக்கண், செந்நிற மேனி, தேன்கிண்ணம், அங்குசம், பாசம், துவஜம் கொண்ட நான்கு கரங்கள்.

19.ஸ்ரீ திரயாட்சர விநாயகர்: ஆடும் காதுகளில் சாமரம் எனும் அணிகளும், தந்தம், அங்குசம், பாசம், மாம்பழம் கொண்ட நான்கு கரங்கள். தும்பிக்கையில் கொழக்கட்டை பொன்னிற மேனி.

20.ஸ்ரீ ஷிப்ர பிரசாத விநாயகர்: பிறையுடையாடை, முக்கண் கொண்ட சிவந்த மேனி, தந்தம், தாமரை, அங்குசம், பாசம், கற்பகக் கொடியுடன் ஆறு கரங்கள். துதிக்கையில் மாதுளம் பழம்.

21.ஸ்ரீ ஹரித்ரா விநாயகர்: மஞ்சள் ஆடையுடைய பொன்னிற மேனி. தந்தம், அங்குசம், பாசம், மோதகம் கொண்ட நான்கு கரங்கள்.

22.ஸ்ரீ ஏகதந்த விநாயகர்: பெருத்த வயிறு, ஒற்றைத் தந்தம், அக்கமாலை, கோடரி, லட்டு கொண்ட நான்கு கரங்களைக்கொண்ட நீல மேனி.

23.ஸ்ரீ சிருஷ்டி விநாயகர்: தந்தம், அங்குசம், பாசம், மாம்பழம். கொண்ட நான்கு கரங்கள். செந்நிற மேனியில் பெருச்சாளி வாகனம்.

24.ஸ்ரீ உத்தண்ட விநாயகர்: வலது கையில் தாமரை ஏந்தியுள்ள பச்சை நிற தேவியை இடது கையால் அணைத்துள்ள செந்நிற மேனி. த்ந்தம், மலர்மாலை, தாமரை, கதை, பாசம், நீலோற்பலம்,நெற்கதிர், கரும்புவில், மாதுளம்பழம் கொண்ட ஒன்பது கரங்கள் துதிக்கையில் ரத்ன கும்பம்.

25.ஸ்ரீ ருணமோகன விநாயகர்: செம்பட்டுடுத்தி வெண்பளிங்கு நிறம் கொண்டவர். தந்தம், அங்குசம், பாசம், நாவற்பழம் ஏந்திய நான்கு கரங்கள்.
26,ஸ்ரீ துண்டி விநாயகர்: நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் செந்நிற மேனி.தந்தம், அக்கமாலை, கோடரி, ரத்தின பாத்திரம் தாங்கிய நான்கு கரங்கள்.

27.ஸ்ரீ இருமுக விநாயகர்: இரு முகம், செந்நிற ஆடை, ரத்தின கீரிடம், நீலநிற மேனி. தந்தம், அங்குசம், பாசம், ரத்தின பாத்திரம் கொண்ட நான்கு கரங்கள்.

28.ஸ்ரீ திரிமுக விநாயகர்: அபயம், அக்கமாலை, அங்குசம் உள்ள மூன்று வலது கரங்கள், பாசம், அமுத கலசம், வரதம் மூன்று இடது கரங்கள், தங்க தாமரை பீடத்தில் அமர்ந்திருக்கும் செந்நிற மேனி.

29.ஸ்ரீ சிங்க விநாயகர்: சிங்க வாகனத்தில் அமர்ந்துள்ள வெண்ணிற மேனி. வரதம்,வீணை, சிங்கம், கற்பகக்கொடி கொண்ட நான்கு வலக்க்ரங்கள், தாமரை, மலர்க்கொத்து, ரத்தின கவசம், அபயம் கொண்ட நான்கு கரங்கள்.

30.ஸ்ரீ யோக விநாயகர் : யோக ஆசனத்தில் யோக பட்டம் கட்டிக்கொண்டு யோக தண்டம், அக்கமாலை, பாசம், கரும்பு தாங்கிய நான்கு கரங்கள், நீல நிற ஆடை அணிந்த பால சூரிய நிறம்.

31.ஸ்ரீ துர்க்கா கணபதி: அம்பு, தாமரை, அக்கமாலை, அங்குசம், பாசம், அஸ்திரம், கொடி, வில் ஆகியவற்றை எந்திய எட்டு கரங்கள் செந்நிற ஆடையுடைய பொன்னிறம்.

32.ஸ்ரீ சங்கட ஹர விநாயகர்: துயரங்களைப் போக்குபவர், நீல ஆடை அணிந்த பால சூரியன் போன்ற நிறம். இடது மடியில் நில மலரை ஏந்திய பச்சை மேனியுடைய தேவியை அமர்த்தியிருப்பவர். வரதம் அங்குசமுடைய வலக்கரம், பாசம், பாயச பாத்திரமுடைய இடக்கரம்.

இரண்டு கொம்புத் தேங்காய் கேட்ட ஈசன்!

முற்காலத்தில் கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக
இருந்தது வாயரைக்கால் நாடு. பல்லடம்,
பொள்ளாச்சி ஆகிய பகுதிகள் அடங்கிய இந்
நாட்டில் அமைந்த ஊர் சூலூர்.
-






சூரல் என்பது நாணல் வகையைச் சேர்ந்த ஒரு
தாவரம். நொய்யல் நதியில் தென்கரையில்
இத்தாவரம் மிகுதியாகக் காணப்பட்டதால்
இப்பகுதி சூரலூர் எனப்பட்டது. அதுவே மருகி
பின்னர் சூலூர் என்று அழைக்கப்படுகிறது.


9ம் நூற்றாண்டில் மன்னன் கரிகாற்சோழன்,
இங்கிருந்த காட்டை அழித்து ஊராக்கும் போது
சுயம்பு மூர்த்தம் ஒன்றைக் கண்டார். அதை
சிறிய இடத்தில் பிரதிஷ்டை செய்து,
வைத்யலிங்கமுடையார் என்ற திருநாமத்தை
சூட்டி கும்பாபிஷேகம் செய்தார்.
-
கொங்கு நாட்டில், முட்டத்திலிருந்து கரூர்
வரை நொய்யல் நதியோரத்தில் இதுபோன்று
36 சிவாலயங்களை கரிகாற்சோழன் திருப்பணி
செய்ததாக வரலாறு மூலம் அறியப்படுகிறது.
தமிழ்நாடு அரசு 1950ம் ஆண்டு வெளியிட்ட
சோழன் பூர்வ பட்டயம் எனும் நூல் இச்
செய்தியை உறுதி செய்கிறது.
-

1168-1196 ஆண்டுகளில் இப்பகுதியை அரசாண்0
மூன்றாம் வீரசோழன் இக்கோயிலில் பூஜை
காரியங்கள் தங்கு தடையின்றறி நடைபெற
வரிக்கொடை அளித்த செய்தியை செலக்கரச்சல்
மாரியம்மன் கோயிலில் உள்ள கல்வெட்டில்
காணலாம்.
-
நொய்யல் நதியின் தெற்காக, இருபுறமும்,
சூலூர் குளத்தின் நீரால் சூழப்பெற்று எழிலார்ந்த
தோற்றத்தில் காணப்படுகிறது கோயில்.
கொங்கு நாட்டிலுள்ள ராகு-கேது பரிகார
தலங்களுள் ஒன்றாகக் கருதப்படும் இத் தலம்
மூர்த்தி, தீர்த்தம் ஆகிய முப்பெருமைகளை
கொண்டது.

-
மூலவர் சுயம்பு வைத்யநாத சுவாமி,
மிகப் பழமைவாய்ந்த மூர்த்தம். முதலில் கல்ஹார
கோயிலாக இருந்து, நாளடைவில் பிற
கோயில்களைப் போலவே இறைவியையும்
பரிவார மூர்த்திகளையும் பிரதிஷ்டை
செய்திருக்கிறார்கள்.
-
கிழக்கு தெற்கு என இரு நுழைவாயில்கள்.
கிழக்கு வாயில் முன்பு தீபஸ்தம்பத்தை அடுத்துள்ள
அரசமரத்தடியில் விநாயகப் பெருமான் ராகு-
கேதுவுடன் அருளாசி வழங்குகின்றார். வள்ளி-
தெய்வானை சமேத முருகன். வைத்யநாத சுவாமி,
தையல் நாயகி ஆகியோர் அடுத்தடுத்துள்ள
பிரதான சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

-
உட்பிராகாரத்தில் மகாகணபதி, அரசமரத்தடி
விநாயகர் மற்றும் வன்னிமர விநாயகர் என மூன்று
இடங்களில் ராகு-கேதுவுடன் ஆனைமுகன் அருள்
பாலிப்பது சிறப்பு. மேலும் ஐயப்பன், தட்சிணாமூர்த்தி,
சண்டிகேஸ்வரர், மகாலட்சுமி, மகா சரஸ்வதி, துர்க்கை,
நவகிரகம், சந்தான பைரவர், சனீஸ்வரர், சந்திரன்,
சூரியன் ஆகியோர் பரிவார தெய்வங்களாக உள்ளனர்.
-
இங்குள்ள நந்திபகவான் கல்யாண குணநந்திகேஸ்வரர்
என அழைக்கப்படுகிறார். திருமணம் தடைபட்டோர்
தங்கள் கைகளாலேயே இவருக்கு நல்லெண்ணெய்
காப்பிட்டு, மாலை சாற்றி பூஜைகள் மேற்கொள்ள
வேண்டும். பின் அந்த மாலையை அணிந்து கொண்டு
வைத்யநாத ஸ்வாமிக்கு நடைபெறும் பூஜையில்
கலந்து கொண்டால் திருமணத் தடை விலகி, விரைவில்
திருமணம் நடந்தேறுகிறதாம்.

-
இத்தல இறைவன் பல அற்புதங்களை நிகழ்த்தி
இருக்கிறார். ஒருசமயம் தன் பக்தை ஒருவரின்
கனவில் தோன்றிய ஈசன், “உங்கள் தோட்டத்தில்
உள்ள தென்னைமரத்தில் இரண்டு கொம்புகளுடன்
கூடிய தேங்காய் ஒன்றுள்ளது. அதைப் பறித்து என்
பூஜைக்குக் கொண்டுவந்து கொடு!’ என்றார்.
-
விடிந்தவுடன் பணியாளை அழைத்து குறிப்பிட்ட
தென்னைமரத்தில் உள்ள தேங்காயைப் பறித்து
வரும்படி கூறினார், அப்பெண்மணி.
-
என்ன ஆச்சர்யம்! ஈசன் சொல்லியபடியே அம்
மரத்தில் இரு கொம்புகளுடன் முற்றிய தேங்காய்
இருந்தது. பொதுவாகத் தென்னை மரத்தில் காய்
முற்றிவிட்டால் தானாகவே விழுந்துவிடும்.
அவ்வாறில்லாமல் அக்காய் மரத்திலேயே
இருந்ததும் வியப்புக்குரியது. பின்னர் அதைப்
பறித்துக் கொண்டு வந்து பூஜைக்குக் கொடுத்து
விட்டு, அந்த அற்புத நிகழ்வை அனைவரிடமும்
கூறி மனம் நெகிழ்ந்து போனாராம்.
-
இத்தலத்திலுள்ள அனைத்து தெய்வங்களுக்கும்
உரிய மாத, வருட வைபவங்கள் நடந்தாலும்
சிறப்பு விழாக்களாகக் கொண்டாடப்படுவது
ஆனித்திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம், ஐப்பசி
அன்னாபிஷேகம் மற்றும் ஆடி மாதம் முதல்
ஞாயிறன்று நடைபெறும் ஏகாதச
ருத்ராபிஷேகமாகும்.

-
வரும் 20.07.2014 அன்று அவ்வாலயத்தில் நடைபெறும்
ருத்ராபிஷேகத்தில் நீங்களும் பங்கு பெற்று
வைத்யநாத சுவாமியின் திருவருளைப் பெறலாமே!

-
எங்கே இருக்கு: கோவை மாவட்டம், சூலூர் பேருந்து
நிலையத்திலிருந்து முத்துகவுண்டன்புதூர்
செல்லும் வழியில், சுமார் அரை கி.மீ. தொலைவில்
குளக்கரையில் உள்ளது வைத்யநாதசுவாமி ஆலயம்.
-
தரிசன நேரம்: காலை 7 முதல் 11.30 வரை;
மாலை 5 முதல் இரவு 8 வரை.
-
தொலைபேசி: 044-2300360
-
——————————-
– வி.பி. ஆலாலசுந்தரம், கோவை.
(குமுதம் பக்தி செய்திகள்)

அழகான மகாலட்சுமிக்கு அழகில்லாத ஆந்தை வாகனம் ஏன்?

லக்ஷ்மி தேவியின் வாகனம் ஆந்தை.
சம்ஸ்கிருதத்தில் உல்லூகம் எனப்படும்
(ஆங்கிலத்தில் ஆவுள் என்பது இதிலிருந்து வந்தது)
-
பரமசிவனுக்குக் கம்பீரமான ரிஷபம்,
சரஸ்வதி தேவிக்கு நளினமான ஹம்ஸம்,
மஹா விஷ்ணுவிற்கு விரைந்து செல்லக்கூடிய கருடன்

போன்று இருக்கையில் அழகே உருவான லக்ஷ்மி
 தேவிக்கு மட்டும் ஏன் அழகில்லாத ஆந்தை வாகனம்?
-
ஆந்தை பார்ப்பதற்கு அழகில்லா விட்டாலும்,
நள்ளிரவு இருட்டில் கூட துல்லியமாகப் பார்க்கக்கூடிய
 கூரிய கண் பார்வை உடையது,அதன் செவி நுட்பமும் அபாரம். இரவு முழுவதும் தூங்காமல் தனக்குத் தேவையான இரையைத் தேடும்.
ஆந்தை போன்று யார் ஒருவர் ஐம்புலன்களையும்
 எப்பொழுதும் கவனத்துடன் வைத்துக் கொண்டு
 தூக்கம். சோம்பல் பார்க்காமல் கடுமையாக உழைக்கத்
 தயாராக இருக்கிறார்களோ அவர்களைத் தேடி லக்ஷ்மி
 தேவி வருவாளாம். அதாவது பொருள் வசதிக்கு எப்பொழுதும் குறைவிராது.

Wednesday 2 July 2014

மாங்கல்ய தோஷம் தீர்க்கும் பேச்சியம்மன் வழிபாடு

திருச்சியில் உள்ள அங்காள பரமேஸ்வரி ஆலத்தில் அகோர வீரபத்ரருக்கு வெற்றிலை மாலை சூட, கைமேல் பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
உடல்நலம் குறைவாக உள்ளவர்கள் இங்குள்ள பேச்சியம்மனுக்கு அபிஷேகம் செய்தால் நோய் குணமாகி பூரண நலன் பெறுவது உறுதி என்கின்றனர் பக்தர்கள். மாங்கல்ய தோஷம் உள்ள பெண்களும், உயிருக்குப் போராடும் கணவனைக் காப்பாற்ற தவிக்கும் பெண்களும் இங்கு அன்னையின் சன்னிதிக்கு முன் வந்து, கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்கின்றனர். அவர்களது பிரார்த்தனை பலித்ததும் அன்னைக்கு தாலி காணிக்கை செலுத்தி தங்கள் நன்றிக் கடனை செலுத்துவது அடிக்கடி இங்கு நடக்கும் சம்பவமாகும்.

Saturday 28 June 2014

திருமுருக கிருபானந்த வாரியார்

தமிழ் இலக்கியம் மற்றும் இந்து சமய ஆன்மிகச் சொற்பொழிவில் தனக்கென தனிப் பெயரை ஏற்படுத்திக் கொண்ட மிகச் சிறந்த சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார். இவர் சொற்பொழிவைக் கேட்க எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். எந்தச் சொற்பொழிவாக இருந்தாலும் அதில் நகைச்சுவை கலந்து, மகிழ்ச்சியைச் சேர்த்து வழங்கும்
 

 
தனித்திறன் அவருக்குண்டு. சின்னக் குழந்தைகளைக் கூட தன் பேச்சால் கவர்ந்து வயப்படுத்தி வைத்திருந்த மகான் இவர். இந்தியா மட்டுமில்லாது, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் சிறப்பான சொற்பொழிவுகளை நிகழ்த்தி உலகத் தமிழர்கள் அனைவரது மனத்திலும் தனக்கென நீங்கா இடம் பெற்றிருந்தார் என்றால் அது மிகையில்லை.
 
பிறப்பும் கல்வியும்
****************
வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்த காங்கேயநல்லூர் எனும் கிராமத்தில் செங்குந்த வீர சைவ மரபில் வந்த மல்லையதாசர் – கனகவல்லி தம்பதியருக்கு மொத்தம் பதினோரு குழந்தைகள் பிறந்தன. இவற்றுள் 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதியில் நான்காவது குழந்தையாகப் பிறந்தவர் கிருபானந்த வாரியார். இவருக்கு, இசையாலும், புராணச் சொற்பொழிவாலும் இறைவன் புகழ்பாடி வந்த மல்லையதாசர் முருகப்பெருமானின் பல நாமங்களில் ஒன்றான “கிருபானந்த வாரி” எனும் பெயரைச் சூட்டினார்.

“கிருபை” என்றால் கருணை என்றும், “ஆனந்தம்” என்றால் இன்பம் என்றும், “வாரி” என்றால் பெருங்கடல் என்றும் பொருள். இவர் பெயருக்கேற்ப கருணையே உருவாக, பிறரை தன் சொற்பொழிவால் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் பெருங்கடலாகத் திகழ்ந்தார். தமிழ் இலக்கியத்திலும், ஆன்மிகத்திலும் தனித் திறன் பெற்றிருந்த இவருக்கு இவர் தந்தைதான் ஆசான். இவருடைய தந்தையார் இவருக்கு மூன்றாம் வயதிலிருந்து தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார். எட்டு வயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்ற இவர் தேவாரம், திருப்புகழ், திருவருட்பா, கந்தபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலான நூல்களில் பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் அவர் மனப்பாடம் செய்துவிட்டார். கற்றறிந்த புலவருக்கே கடினமாக இருக்கும் அஷ்டநாக பந்தம், மயில், வேல், சிவலிங்கம், ரதம் முதலான பந்தங்கள், சித்திரக் கவிகள் முதலியவைகளை இயற்றினார்.


சொற்பொழிவாளர்
****************
இசை மற்றும் புராணச் சொற்பொழிவாற்றி வந்த கிருபானந்த வாரியாரின் தந்தை மல்லையதாசர் ஒருநாள் சொற்பொழிவு ஒன்றுக்குப் போக முடியாத நிலை. தந்தைக்குப் பதிலாக அந்தச் சொற்பொழிவிற்கு வாரியார் சென்றார். சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள், “மல்லையதாசர் சொற்பொழிவிற்கு வருவதாக ஒத்துக் கொண்டு, தான் வராமல் இளம் வயது மகனை அனுப்பி வைத்திருக்கிறாரே” என்று வருத்தப்பட்டனர். வாரியார் அன்று முதன் முதலாக செய்த சொற்பொழிவைக் கேட்டவர்கள் அசந்து போய்விட்டனர். இந்த இளம் வயதில் இவ்வளவு அனுபவமா? என்று அவருடைய சொற்பொழிவைக் கேட்டவர்கள் மகிழ்ந்து போனார்கள். பதினெட்டு வயதில் சொற்பொழிவைத் தொடங்கிய வாரியாரின் பேச்சு, எளிமையான உரைநடையில் இருந்ததால் அதைப் படிப்பறிவே இல்லாதவர்கள் கூட எளிமையாகப் புரிந்து கொண்டார்கள். சிறுபிள்ளைகள் கூட இவருடைய சொற்பொழிவு என்றால் கேட்க விரும்புவார்கள். அவ்வளவு எளிமையாக இருக்கும். சொற்பொழிவில் அதிகமான நகைச்சுவைகள் அர்த்தத்துடன் இருக்கும்.


பொதுவாக இவர் சொற்பொழிவாற்றும் கூட்டங்களில் சிறுபிள்ளைகள் முன் வரிசையில் அமர்ந்திருப்பார்கள். சொற்பொழிவின் இடையிடையே எளிமையான கேள்விகளைக் கேட்பார். அந்தக் கேள்விகளுக்கு முதலில் பதிலளிக்கும் சிறுபிள்ளைக்கு விபூதியும், சிறிய கந்தசஷ்டிக் கவசப் புத்தகம் ஒன்றும் பரிசாக அளிப்பார். இந்தப் பரிசைப் பெற சிறுவர்களுக்கிடையே ஆர்வம் அதிகமிருக்கும். இதற்காக முன் வரிசையில் இடம் பிடிக்கப் போட்டியும் இருக்கும்.

வாரியார் சொற்பொழிவில் கூட்டம் கலைவது என்பது குறைவாகவே இருக்கும். கலையும் அந்தக் குறைவான கூட்டத்தையும் தக்க வைக்கும் கலையையும் அவர் கற்றிருந்தார்.

வாரியார் ஒரு சமயம் ஒரு ஊரில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். அவர் மிகுந்த சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்த போது பாதியில் ஒவ்வொருவராக எழுந்து போய்க் கொண்டிருந்தனர்.
அவர்களைப் பார்த்து வாரியார் சொன்னார், ”ராமாயணத்தில் அனுமனை “சொல்லின் செல்வர்” என்று குறிப்பிடுவார்கள். இந்த ஊரிலும் சொல்லின் செல்வர்கள் பலர் இருப்பதைப் பார்க்கிறேன்.”என்றார்.
போய்க் கொண்டிருந்தவர்கள் யாரைச் சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள ஆவலுடன் நின்றனர்.

வாரியார் தொடர்ந்து, ”நான் நல்ல பல விஷயங்களைச் சொல்லின் அதைக் கேட்காமல் செல்பவரைத் தான் சொல்கிறேன் .” என்றார்.
இடையில் எழுந்து சென்ற அவர்கள் மீண்டும் அவர்கள் இடத்திற்கு வந்தமர்ந்தனர்.

பெண்களை மதித்தவர்
********************

வாரியார் சொற்பொழிவில் கூட்டத்திற்குக் குறைவு இருக்காது. இந்தக் கூட்டத்தில் பெண்கள் எண்ணிக்கைக்கும் குறைவு இருக்காது. பெண்களைக் குறைவாகப் பேசுவதை வாரியார் விரும்ப மாட்டார். பெண்களை அடிமையாக நினைக்கும் ஆண்களை எச்சரிக்கும் விதமாக “மனைவியைக் கோபிக்கும் ஆண்கள் இருக்கக் கூடாது. மனைவி கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தளைக்காது” என்று சொல்வதுண்டு. குழந்தைகளுக்குப் பெற்றெடுத்த தாயின் பெயரை முதலெழுத்தாக (இன்சியலாக) போடவேண்டும் என்று பெண்களை முன்னிறுத்தும் கருத்தை முதன் முதலாகச் சொல்லியவரும் வாரியார்தான்.
பெண்கள் குறித்து உயர்வான எண்ணம் கொண்டிருந்த வாரியார் பத்தொன்பதாம் வயதில் தாய்மாமன் மகளான அமிர்தலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். தமிழ்நாட்டைப் பொறுத்த வரை கணவன் மனைவியை மதிப்பதே இல்லை. இவற்றையெல்லாம் மனதில் கொண்டு வாரியார் பல சொற்பொழிவுகளில் மனைவியை மதிப்புடன் நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவார்.

மனைவியிடம் மெத்தென்று பழக வேண்டும். “மலரினும் மெல்லிது காமம்” புஷ்பத்திடம் பழகுவதுபோல் மனைவியிடம் பழக வேண்டும். நான்குபேர் இருக்கும் பொழுது மனைவியைச் சத்தம் போட்டுக் கூப்பிடக் கூடாது. பத்துப் பேருக்கு எதிரே மனைவியைச் சத்தம் போட்டுக் கூப்பிட்டால் மனைவி கூசுவாள். மனைவியிடம் சைகையால் பேச வேண்டும். ஒரு மன்னர் பெருமான். இளம் மனைவி. அவன் மனைவியைப் பார்த்தான். அவள் புரிந்து கொண்டாள். தோழி பார்த்தாள். அவள் கண்ணால் கேட்டாளாம். அதற்கு அவள் கடைக்கண்ணாலே பதில் சொன்னாளாம். இதையெல்லாம் கம்பர் சொல்கின்றார்.

“தாழ நின்ற ததைமலர்க் கையினால்
ஆழி மன்னொரு வனுரைத் தான்அது
வீழி யின்கனி வாயொரு மெல்லியல்
தோழி கண்ணில் கடைக்கண்ணில் சொல்லினாள்.”
தமிழனுடைய நாகரீகம். ஒரு தடவை சொன்னால் போதுமே. என்று தமிழன் நாகரீகத்தைச் சொல்லி, பெண்ணைச் சொல்லி, மனைவியை மதிக்க வலியுறுத்துவார்.


முருகப் பெருமான்
****************
வாரியார் தன் சொற்பொழிவில் அடிக்கடி முருகப்பெருமான் தோற்றம் குறித்து சொல்வார். உலகம் தோன்றிய நாள்தொட்டுத் தாய்மார்கள் குழந்தைகளைப் பெறுவார்கள். அப்பா பெயர் வைப்பார். ஆனால் அப்பா குழந்தை பெற்று அம்மா பெயர் வைக்கின்றாள். இது ஒரு புரட்சி. உலகத்திலே எங்குமே ஆண்கள் மருத்துவ விடுதி கிடையாது. ஓர் ஆண் பிள்ளை குழந்தை பெற்றான் என்ற சரித்திரம் கிடையாது. கைலாயத்தில்தான் சிவபெருமான் நெற்றிக்கண்ணிலிருந்து முருகப் பெருமானை உண்டாக்குகின்றார். “ஆண்பிள்ளை” அவர் ஒருவர்தான். நாமெல்லாம் பெண்பிள்ளைகள். பெண் வயிற்றிலிருந்து பிறந்தால் பெண் பிள்ளைகள்தானே.


ஒரு பெண் என்றால் அடக்கமாக இருக்க வேண்டும். ஆண்கள் என்றால் வீரமாய் இருக்க வேண்டும். மாறியிருக்கக் கூடாது. அதேபோல் கடவுள் என்று சொன்னால் கடவுளுக்குச் சில இலக்கணங்கள் உண்டு. என்ன இலக்கணம்? முதல் இலக்கணம் இறப்பும் பிறப்பும் இல்லாமல் இருக்க வேண்டும். நான் சொல்வதையெல்லாம் எப்பொழுதும் நினைவிலே வைத்துக் கொள்ள வேண்டும். எத்தனையோ காலமாக எத்தனையோ நூல்களைப் படித்து அனுபவத்தில் சொல்கிறேன். பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல. நம்மைப் போல பெரிய ஆத்மா என்றுதான் அர்த்தம். சிவபெருமானுக்கு இறப்பும் பிறப்பும் கிடையாது. சிவனே முருகன்; முருகனே சிவன். ஆகவே முருகனுக்கும் இறப்பும் பிறப்பும் கிடையாது.

“செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்”
என்கிறது அருணகிரியாரின் கந்தரனுபூதி.
இராமச்சந்திரமூர்த்தி அவதாரம் பண்ணின நாளை நாமெல்லாம் கொண்டாடுகிறோம்; ஸ்ரீ ராம நவமி. கண்ணபிரான் அவதாரம் பண்ணின நாளைக் கொண்டாடுகிறோம்; கிருஷ்ண ஜயந்தி. ஹனுமத் ஜெயந்தி,சங்கர ஜயந்தி, மத்வ ஜயந்தி, ஸ்ரீ இராமானுஜ ஜயந்தி, பரசுராம ஜயந்தி, வாமன ஜயந்தி. எந்தக் கோவிலிலாவது சிவ ஜயந்தி, சிவன் பிறந்தநாள் விழா, சுப்ரமணிய சுவாமி ஜயந்தி, முருகன் அவதாரம் பண்ணின நாள் என்று இதுவரையிலும் உண்டா? கிடையாது. பிறப்பு இறப்பு இல்லாதவன் இறைவன். அதுதான் இறைவனுடைய லட்சணம். இந்தப் பாட்டில் வருகிறது:
“ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும்
ஏதுவும் வரவும் போக்கும் இன்பமும் துன்பும் இன்றி
வேதமும் கடந்து நின்ற விமலஓர் குமரன் தன்னை
நீதரல் வேண்டும் நின்பால் நின்னையே நிகர்க்க என்றார்”
நீ தர வேண்டும். ஆண்டவனே குழந்தையை நீரே தர வேண்டும். “நீ தர” – அது தங்களிடத்திலிருந்து வர வேண்டும். “நின்னையே நிகர்க்க” என்றார்.

குழந்தைப் பற்று
****************
வாரியார் தம்பதிகளுக்கு குழந்தைகள் ஏதுமில்லை என்றாலும் குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தார். தன் கூட்டங்களில் குழந்தைகளுக்கு முன் வரிசையில் இடமளித்த இவர், குழந்தைகளுக்காக “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்பதை உணர்ந்து “தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்’ என்ற நூலை அவர் படைத்தார். இதில் குழந்தைகளுக்குத் தேவையான நல்ல கருத்துக்களையும், எதிர்காலத்திற்கேற்ற சிந்தனைகளையும் அளித்திருந்தார்.


இசைப்பயிற்சி
************
இவருக்கு இருபத்தொரு வயதான போது மைசூரில் நடைபெறும் நவராத்திரித் திருவிழாவிற்கு அழைத்துச் சென்ற இவரது தந்தை வீணை சேஷண்ணாவிடமிருந்து ஒரு வீணை வாங்கிக் கொடுத்தார். பின்னர் சென்னையில் நாட்டுப் பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் ஓர் இசை ஆசிரியரிடம் வீணை கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார். வாரியாருக்கு 23 வயதான போது, சென்னையில் உள்ள யானைக்கவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாசாரியாரிடம் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வீணைப் பயிற்சி பெற்றார்.
இதன் பிறகு இசை ஞானத்தால் இசைச் சொற்பொழிவு செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார். இசையில் ஈடுபாடுடைய இவர் இசை குறித்தும் பல்வேறு தகவல்களைத் தெரிவித்திருக்கிறார். சிவபெருமானும் முருகனும் இசையில் முதற்கடவுள்கள் என்று ஒரு கருத்தையும் தெரிவித்தார்.
இசையிலேயே ஆகப் பெரியவர் சிவபெருமான். சிவபெருமான் வீணை வாசிப்பார்.


“வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி”
வீணா தட்சிணாமூர்த்தி. முதன் முதலிலே புல்லாங்குழல் வாசித்தவர் முருகப் பெருமான். கிருஷ்ணர் இல்லை. கிருஷ்ணர் காலம் ஐயாயிரம் ஆண்டு. முருகப் பெருமான் ஆதியும் அந்தமும் இல்லாதவர். திருமுருகாற்றுப் படையிலே,
“குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்”
என வருகிறது. குழல் என்றால் புல்லாங்குழல் என்று அர்த்தம். யாழ் செயற்கை வாத்தியம். குழல் இயற்கை வாத்தியம்.
“குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்”
என்று வள்ளுவர், முதலில் குழலைச் சொல்லிவிட்டுப் பிறகு யாழினைச் சொல்கிறார். எது முக்கியமோ அதை முதலிலே சொல்லுகின்றார். முருகப்பெருமான் குறிஞ்சி நிலக்கடவுள். குறிஞ்சி நிலத்திலே (மலையிலே) வாழுகின்ற தெய்வம், மலையிலே விளைகின்ற மூங்கிலை வெட்டி அதைத் துளையிட்டுப் புல்லாங்குழல் வாசித்தாராம். யார்? சுப்பிரமணியசுவாமி. தன்னை அறியாது வாசித்தாராம். ஆகவே அந்தக் குடும்பமே சங்கீதக் குடும்பம். என்று சிவபெருமான் குடும்பத்தை இசைக் குடும்பமாக்கிய பெருமை வாரியாருக்கு உண்டு.

சைவ சித்தாந்தம்
**************
சுவாமிகள் சைவ சித்தாந்தத்திலும் பெரும் புலமை பெற்றவர். அபரிதமான நினைவாற்றலும், நாவன்மையும் பெற்றவர். அவர் கூறும் நுட்பங்களைக் கேட்டு கல்வியில் சிறந்த புலவர்களும் தங்களுக்கு இது தெரியாதே என்றபடி வியந்து பாராட்டினார்கள். “வாரியார் வாக்கு கங்கை நதியின் பிரவாகம் போலப் பெருக்கெடுத்தோடுகிறது; மிக உயர்ந்த முத்துக்கள் அவர் வாக்கிலிருந்து உதிர்கின்றன” என்று அறிஞர்கள் புகழ்ந்தார்கள். இவருடைய சொற்பொழிவைக் கேட்பதற்காக ஆண், பெண், குழந்தைகள் என பலரும் கூடியிருப்பார்கள். சுவாமிகள் திருமுருகாற்றுப்படை, திருவாசகம், தேவாரம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், திருவகுப்பு, திருவருட்பா முதலான தோத்திர நூல்களில் இருந்து பல பாடல்களை, பாடல் வரிகளை தம்முடைய சொற்பொழிவுகளில், ஏற்ற இடங்களில் தட்டுத் தடங்கல் இல்லாமல் இசையோடு பாடுவார். கூட்டத்திலிருப்பவர்கள் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
இவருடைய இசை ஞானத்தைப் பாராட்டி, சென்னைத் தமிழிசை மன்றத்தினர் வெள்ளி விழாவின் போது அவருக்கு, “இசைப் பேரறிஞர்” பட்டம் வழங்கிச் சிறப்பித்தனர். இவருடைய சொற்பொழிவுகளுக்கிடையிடையே குட்டிக் கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் வாரியாருக்குரிய சிறப்பியல்புகளாகும்.


இசுலாமியர் கருத்து
*****************
ஒருமுறை திருப்பரங்குன்றத்தில் வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு நிகழ்த்திய போது கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து நின்று, “சுவாமி! இத்திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலை என்று பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்று இசுலாம் சமயத்தைச் சார்ந்த சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்துத் தங்களின் கருத்து என்ன?” என்று கேட்டார்.
அதற்கு வாரியார், “இதில் என்ன தவறு இருக்கின்றது. அவர்கள் சிக்கந்தர் மலை என்று பெயர் வைத்தால் வைத்துக் கொள்ளட்டுமே.” என்று கூற “அனைவரும் அது எவ்வாறு பொருந்தும்? என்ன சுவாமி தாங்களே இவ்வாறு கூறினால் சமுதாயத்தில் குழப்பம் ஏற்பட்டு சமயச் சண்டையாக இது மாறிவிடாதா?” என்று கேட்டனர்.


இதனைக் கேட்ட வாரியார், “முருகனின் தந்தையார் பெயர் என்ன? சிவபெருமான். முருகனுக்கு வழங்கும் வேறு பெயர் என்ன? கந்தன். இதனைத்தான் சி.கந்தன், சிக்கந்தர் என்று குறிப்பிட்டு சிக்கந்தர் மலை என்று கூற முற்படுகின்றனர். இதில் தவறில்லை” என்று கூற, கூட்டத்தினர் ஆராவாரித்து மகிழ்ந்தனர். யாரும் எதிர்பார்க்காத இந்த விடையானது மக்களைச் சிந்திக்கச் செய்தது. இறைவன் ஒருவரே என்ற எண்ணத்தையும் அவர்களின் உள்ளத்தில் விதைத்தது. இவருடைய நகைச்சுவையான பேச்சுக்கு மாற்று மதத்தவர்களும் ரசிகர்கள் தான். இது போல் மாற்று மதத்தவர் கருத்தாக இருந்தாலும் சிறப்பானதை இவர் ஏற்றுக் கொண்டிருந்தார் என்பதும் உண்மை.
“எனக்கு அஜீரணம் என்பது என்னவென்றே இதுவரை தெரியாது. பசியெடுத்த பின் கையை வாய்க்குள் வைப்பவனும், பசி அடங்குவதற்கு முன் கையை வாயை விட்டு எடுத்துக் கொள்பவனும் நோய் வாய்ப்பட மாட்டான்” என்று ஒரு இசுலாமிய அன்பர் கூறியதை நினைவில் வைத்துக் கொண்டதுடன் அதைத் தொடர்ந்துக் கடைப்பிடித்தும் வந்தார். இதை அடிக்கடி அவருடைய சொற்பொழிவில் குறிப்பிடுவதுமுண்டு.


தமிழ் பற்றாளர்
****************
வாரியார் தமிழ்க்கடவுள் முருகனை முதற்கடவுளாகக் கொண்டு தமிழில் சொற்பொழிவுகளை நிகழ்த்தினாலும், சிலர் இவரை வடமொழி ஆதரவாளர் என்று வாதிட்டவர்களும் உண்டு. தமிழை இவர் எவ்வளவு உயரமான இடத்தில் வைத்திருந்தார் என்பதை அவருடைய சொற்பொழிவாலேயே உணர முடிகிறது.


தமிழ் மிகத் தொன்மையானது. மற்ற மொழிகளைப் போலப் பின்னே வந்த மொழி அல்ல. தமிழின் பெருமையைச் சொல்லுகிறேன். கைலாயத்தில் சிவபெருமானுக்கும் உமாதேவியாருக்கும் திருமணம். முனிவர்கள், சித்தர்கள், தேவர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். அப்போது வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விட்டது. என்ன பண்ணுவது? இமயமலை உச்சியில் எல்லாரும் உட்கார்ந்திருக்கின்றார்கள். சிவபெருமான் அகத்திய முனிவரைக் கூப்பிட்டார். “அப்பனே! வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விட்டது. என்ன பண்ணுவது? இமயமலை உச்சியில் எல்லோரும் உட்கார்ந்திருக்கின்றார்கள். சிவபெருமான் அகத்திய முனிவரைக் கூப்பிட்டார். “அப்பனே வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விட்டது. நீ பொதிகை மலைக்குப் போ” என்றார். அவர் அடியார்.


அவர். “அடிக்கடி நடக்கின்ற கல்யாணமா சுவாமி! இந்தப் பாவி இந்தக் கல்யாணத்தைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே” என்றார். “நீ வருத்தப்படாதே; இந்தக் காட்சியை உனக்கு அங்கே தருகின்றேன்” என்றார். அவருக்குத் தமிழ் தெரியாது. இது தமிழ்நாடு. மூன்றே முக்கால் நாழிகையிலே தமிழ் சொல்லிக் கொடுத்தாராம். கற்பூர புத்தி. உடனே தெரிந்து கொள்பவர்களும் உண்டுதானே? ஓரளவு தமிழ் பேசுவதற்கு ஞானம் வேண்டும். அப்புறம் அங்கு மகாவித்வான்கள் எல்லாம் வருவார்களே? அவர்களுடன் பேசத்தான் தமிழ் கற்றுக் கொண்டார். இலக்கணம் படித்தால்தானே எல்லோரும் மதிப்பார்கள். முருகப் பெருமானை வேண்டித் தவம் செய்தார். கந்தக் கடவுள் வந்தார். எனக்குத் தமிழ் சொல்லிக் கொடு என்றார். முருகப்பெருமான்தான் அகத்தியருக்கு இலக்கணம் சொல்லிக் கொடுத்தார். அவர் அகத்தியம் என்று ஓர் இலக்கணம் செய்தார். இது ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அதில் சில பாடல்கள் மட்டும் கிடைத்திருக்கின்றன. கடல்கோள்களால் அநேக பாடல்கள் அழிந்து விட்டன. அந்த அகத்தியம் சிதைந்த பிறகு அவருடைய 12 சீடர்களில் ஒருவரான தொல்காப்பியர்தான் தமிழ் இலக்கணம் செய்தார். அதுதான் தொல்காப்பியம்.
நம்முடைய வாழ்க்கை நான்கு வகையாகும். கிடத்தல், இருத்தல், நிற்றல், நடத்தல். படுத்திருபோம்; எழுந்து உட்காருவோம்; நிற்போம்; நடப்போம். இந்த நான்கைத் தவிர வேறு கிடையாது. யுகங்கள் நான்கு. கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம். நிலம் நான்கு. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல். பெண்மைக்கு நான்கு. அச்சம், மடம், பயிர்ப்பு, நாணம். ஆண்களுக்கு புருஷார்த்தங்கள் நான்கு. அறம், பொருள், இன்பம், வீடு. எழுத்து நான்கு. உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து, ஆயுத எழுத்து. சொல் நான்கு பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல். பாட்டு நான்கு. வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா. எல்லா மொழிகளிலுமே நான்கில்தான் அடக்கம். சுழி, பிறை, நேர்க்கோடு, குறுக்குக்கோடு. இரண்டு நேர்கோடு போட்டால் “ப” இப்படி போட்டால் “H” . இப்படிப் போட்டல் “L”. இப்படிப் போட்டால் “ட”. அறிவுக்குச் சிந்தனை. “அ” கரத்தில் இந்த நான்கும் வைத்தார்கள்.


“மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்” – தொல்காப்பியம்
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு” – திருக்குறள்.
“அகர உயிர்போல் இறை” -திருவருட்பயன்.
“அகரமு மாகி, அதிபனு மாகி” – அருணகிரியார்.
சில நுட்பங்களையெல்லாம் தொல்காப்பியத்திலே மிக அற்புதமாகச் சொல்லியிருக்கின்றார். நான்கு நிலங்களை வகுத்தார். அந்த நிலங்களுக்குத் தெய்வத்தைச் சொன்னார். நிலத்தை ஒப்புக் கொண்டால் தெய்வத்தை ஒப்புக் கொள்ள வேண்டும்.. இங்கு உயர்ந்த நிலை எது? மலை. “தணிகை மால் வரையே” என்பது கந்தபுராணம். வரை என்றால் மலை. வரை என்றால் கோடு. எதுவரை நீங்கள் போனீர்? ஆகவே, மலைதான் உயரமாய் இருக்கும். அந்த உயர்ந்த இடத்தில் முருகப்பெருமானை வைத்துச் சொல்கின்றார் தொல்காப்பியர்.


“சேயோன் மேய மைவரை உலகு” தமிழைச் சொல்ல வந்தவர், தமிழின் நிலத்தைச் சொல்ல வந்தவர், அந்த நிலத்துத் தெய்வத்தைச் சொல்லுகின்றார்.
- இப்படி தமிழின் பெருமையை உயர்த்திக் காட்டியவர் வாரியார். ஒருமுறை ஒரு சொற்பொழிவில் ஒரு பாடலைப் பாடி இந்தப் பாடல் முழுவதும் ஒரு மாத்திரையிலேயே எழுதியிருக்கிறார் அருணகிரிநாதர் என்று சொன்னார்.
அந்தப் பாடலில் “அம்மை” என்று ஒரு சொல் வந்தது. சொற்பொழிவு முடிந்து திரும்புகையில் “சுவாமி! “அம்மை” யில் வரும் “ஐ” இரண்டு மாத்திரையாயிற்றே!” என்று ஒருவர் கேட்டார். அதற்கு உடனே வாரியார், “ஆம், “ஐ” க்கு 2 மாத்திரைதான், ஆனால் இந்த ‘ஐ’க்கு பெயர் ஐகாரக் குறுக்கம், எனவே ஒரு எழுத்து தான்” என்று விளக்கினார்.
இப்படி தமிழை கரைத்துக் குடித்த வாரியாரைக் கண்ணதாசன் ஒருமுறை சந்தித்த போது,


“தாமரைக் கண்ணால் பெண்கள் நோக்கினர்” என்று கம்பர் கூறுகிறார். “தாமரையோ செவ்வண்ணம் உடையது. மது அருந்தியவருக்கும், அளவுக்கு அதிக சினம் கொண்டவருக்கும் அல்லவா சிவந்த கண்கள் இருக்கும். அது எவ்வாறு பெண்களுக்குப் பொருந்தும்?” என்று கண்ணதாசன் கேட்டார்,
அதை “தாம் அரைக் கண்ணால்”‘ என்று பிரித்துப் பொருள் கொள்ளலாம் அல்லவா?” என்று விளக்கம் கூறக் கவியரசர் அசந்து போனார்.
வேலூரில் உரை நிகழ்த்த வாரியார் வந்து இருந்தார். அப்போது திராவிடர் கழகத்தினர் “கிருபானந்த “லாரி” வருகிறது” என்று கிண்டல் அடித்துத் தட்டி வைத்திருந்தார்கள். தற்செயலாக வேறு ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த தந்தை பெரியார்,அவர் தங்கியிருந்த வீட்டுச் சன்னல் வழியே வாரியாரின் விரிவுரையைக் கேட்க நேர்ந்தது. “வாரியாரும் நம்மைப்போல தமிழ் வளர்க்கும் முயற்சியிலும், சமுதாயத்தை மேம்படுத்தவுமே பாடுபடுகிறார். அவரைக் கேலி செய்வதா? உடனே, தட்டியெல்லாம் அகற்றுங்கள்!” என்று தன் தொண்டர்களுக்கு உத்தரவு போட்டிருக்கிறார் பெரியார்.


வாரியார் ஆன்மிகச் சொற்பொழிவாற்றினாலும் சரி இலக்கியச் சொற்பொழிவாற்றினாலும் சரி தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் உயர்வுக்கும் முன்னின்றவர் என்பதை இன்றும் யாரும் மறுக்க முடியாது. இவரிடம் திருமணம் மற்றும் விழாக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தவுடனே அவர்களுக்கு வெண்பா மூலம் உடனுக்குடன் வாழ்த்துப்பாடல் அளிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். இவர் தமிழ் மேல் பற்று கொண்டிருந்தார் என்பதை விட தமிழ் இவர் மூலம் பலரிடம் பற்றிக் கொண்டது என்பதே பொருத்தமானது.


எழுத்தாளர்
***********
வாரியார் சுவாமிகள் இலக்கியம் மற்றும் ஆன்மிகச் சொற்பொழிவுகள் நிகழ்த்துவதில் மட்டுமில்லாமல் எழுதுவதிலும் சிறப்பு பெற்று விளங்கினார். இவரது திருப்புகழ் விரிவுரைகளைக் கேட்டு மகிழ்நத சிலர் திருப்புகழ் விரிவுரையை நூலாக எழுதி உதவ வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர். வாரியார் 1936-ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழாவுக்காக வடலூர் சென்றிருந்தார். அங்கு சத்திய ஞான சபையில் அமர்ந்து “திருப்புகழ் அமிர்தம்’ என்ற மாதப் பத்திரிகையை வெளியிடக் கருதினார். அதற்காக “கைத்தல நிறைகனி” என்று தொடங்கும் திருப்புகழ் பாவுக்கு உரை எழுதினார். அது முதல் “திருப்புகழ் அமிர்தம்” எனும் மாத இதழைத் தொடங்கினார். இந்த இதழை சுமார் முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். இந்த இதழில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரையும், கந்தர் அலங்கார உரையும், கற்பு நெறிக்கதையும், வேறு பல கட்டுரைகளும் எழுதினார். இந்தப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டு தனித்தனி நூல்களாக வெளியிடப்பட்டன. திருப்புகழ் அமிர்தம் என்ற இதழ் பலருடைய வாழ்க்கையைத் திருத்தியிருக்கிறது என்று வாரியார் சுவாமிகள் எழுதியுள்ள அவரது வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளார். இதற்கான சில நிகழ்ச்சிகளையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் அதிகமான ஆன்மிகக் கருத்துக்களைக் கொண்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இவையனைத்தும் இலக்கியத்தரம் வாய்ந்தவை மட்டுமன்றி, தெளிவான நடையில் அமைந்தவையும் ஆகும். இவர் 150க்கும் அதிகமான நூல்களையும் எழுதியுள்ளார். இவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் போன்றவை சிறப்பு பெற்றவை. இவரது சொற்பொழிவுகளில் 83 குறுந்தகடுகளாகவும் வெளியிடப்பட்டிருக்கின்றன என்பதும் இங்கு குறிப்பிடத் தகுந்தது.


தமிழ்த் திரையுலக ஈடுபாடு
************************
வாரியார் எழுத்துத் துறையில் மட்டுமில்லாது தமிழ்த் திரைப்படத்துறையிலும் தன்னைச் சேர்த்துக் கொண்டார். தியாகராஜ பாகவதர் நடித்த “சிவகவி” எனும் படத்திற்கு வசனங்கள் எழுதியதுடன் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர் வேண்டுகோளுக்கேற்ப “துணைவன்”, “திருவருள்”, “தெய்வம்”, போன்ற சில தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்தார். திரைப்பட நடிகராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் இருந்த எம்.ஜி.ஆருக்குப் பொன்மனச் செம்மல் என்ற பட்டத்தை அளித்தார். இந்தப் பட்டம் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் அனைவராலும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட பட்டம் என்பதும் இங்கு குறிப்பிடக்கூடியது.


இறை வழிபாடும் இறை சேவையும்
*******************************

20-ஆம் நூற்றாண்டின் இரண்டாவது அருணகிரிநாதராக விளங்கிய பாம்பன் சுவாமிகள் சண்முகநாதனை மும்முறை நேரில் தரிசித்த மகான் என்று போற்றப்படுபவர். இவரை சென்னையில் ஒரு கீற்றுக் கொட்டகையில் சந்தித்து ஆசி பெற்ற வாரியார் ஒருமுறை விரிவுரை செய்வதற்காக திருநாரையூர் சென்றிருந்த போது, விடியற்காலை பாம்பன் சுவாமிகள் தம்முடைய கனவில் தோன்றி சடக்கரமந்திரம் உபதேசம் செய்ததாக இவரின் வாழ்க்கை வரலாற்று நூலில் எழுதியுள்ளார்.
வாரியார் சுவாமிகள் வாழ்நாள் முழுவதும் கோயில், பூசை, சொற்பொழிவு என்று ஆன்மிக வழியில் சரியாகச் சென்று கொண்டிருந்தார். ஒருநாள் கூட முருகனுக்குப் பூசை செய்யாமல் இருந்ததில்லை. இவரின் மூச்சு கூட முருகா! முருகா!! என்றுதான் இருந்தது. தனி மனித ஒழுக்கத்தையும், பல நல்ல உபதேசங்களையும் வழங்கிய வாரியார் அதன்படி வாழ்ந்தும் காட்டினார். கார்த்திகை மாதம் சோமவாரம் (திங்கட்கிழமை) தொடங்கி ஐந்து சோமவாரம் உபவாசம் (உண்ணா நோன்பு) இருந்ததுடன் இவ்விரதத்தை தனக்குத் தெரிந்தவர்கள்
Kripananda Variar performing daily puja
அனைவரையும் இருக்கச் செய்தார்.


உலகில் எங்கெங்கு முருகன் கோவில் இருக்கிறதோ, அங்கெல்லாம் சென்று முருகனை வழிபட்டவர் வாரியார். ஆனாலும் வயலூர் முருகன் மீது அவருக்கு தனி ஈடுபாடு உண்டு. வாரியார் தனது சொற்பொழிவை தொடங்கும் போதெல்லாம் “வயலூர் எம்பெருமான்…” என்று கூறிதான் சொற்பொழிவை தொடங்குவது வழக்கம். இது போல் இவரிடம் நினைவுக் குறிப்புக் (ஆட்டோகிராப்) கையெழுத்து வேண்டுவோரிடம், “இரை தேடுவதோடு இறையையும் தேடு” என்ற வாக்கியத்தையே பெரும்பான்மையாக எழுதிக் கையெழுத்து இடுவார் .

ஒரு முறை பழநி ஈசான சிவாச்சாரியார் என்பவர் லியோ டால்ஸ்டாய் எழுதிய “நாம் என்ன செய்யவேண்டும்?” என்ற நூலை வாரியாரிடம் தந்தாராம். அந்த நூலைப் படித்த வாரியாருக்கு பொன், பொருள் உலகம் என்ற பற்று பறந்து போயிற்று. தான் அணிந்திருந்த தங்க நகைகளை காங்கேய நல்லூர் முருகனுக்குக் காணிக்கை ஆக்கினார். திருச்சியிலிருந்து கரூர் செல்லும் வழியில் திருப்பராய்த்துறை எனுமிடத்தில் பிரம்மச்சாரி ராமசாமி என்பவர் தொடங்கிய இராமகிருஷ்ண குடில் எனும் அமைப்புக்கு இவர் பல ஆண்டுகள் நன்கொடை வசூல் செய்து கொடுத்து வந்தார். அனாதைக் குழந்தைகளுக்கு அடைக்கலம் அளித்து வரும் இந்த அமைப்பு இன்று வளர்ந்திருப்பதற்குக் காரணம் வாரியார் சுவாமிகள்தான். ஏழை எளிய குடும்பத்து மாணவர்களின் கல்விச் செலவுக்காக இவர் பல நன்கொடைகளைக் கொடுத்திருக்கிறார். இவர் பிறந்த காங்கேயநல்லூரில் பல கல்வி நிறுவனங்களைத் தொடங்கியிருக்கிறார். இன்றும் இவருடைய பெயரால் மேல்நிலைப் பள்ளிகள் பெண்களுக்கும், ஆண்களுக்கும் தனித்தனியாக நிறுவியிருப்பதைக் காணலாம்.


வாரியார் சுவாமிகள் ஏராளமான கோவில்களுக்கு திருப்பணி செய்து கொடுத்த பெருமையும் இவருக்கு உண்டு. இவர் திருப்பணி செய்ய உதவி புரிந்த கோயில்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காது. வயலூர் முருகன் கோயில், மோகனூர் அருணகிரி அறச்சாலை, வடலூர், காஞ்சி ஏகாரம்பரநாதர் ஆலயச் சுற்றுச்சுவர், சமயபுரம் கோயில், வள்ளிமலை சரவணப் பொய்கை ராஜகோபுரம் போன்ற பல கோயில்கள் இவரது திருப்பணிகளைப் பெற்றிருக்கின்றன.

“இறைவனை ஏன் வணங்க வேண்டும்? இறைவனை வணங்காவிடில் கடவுளுக்கு என்ன நஷ்டம்? மனித வாழ்வில் இறையுணர்ச்சி இல்லாமல் வாழ முடியாதா? என்ற கேள்விகளை நாத்திகப் பெருமக்கள் கேட்கிறார்கள். விலங்குகளும் உண்கின்றன. உறங்குகின்றன; உலாவுகின்றன; இனம் பெருக்குகின்றன; மனிதர்களாகிய நாமும் உண்கிறோம். உறங்குகிறோம். உலாவுகிறோம்; இனம் பெருக்குகிறோம். இவை விலங்குகட்கும், மனிதர்கட்கும் ஒன்றாகவே அமைந்திருக்கின்றன. விலங்குகளினின்றும் மனிதன் உயர்ந்து விளங்குவது தெய்வ உணர்ச்சி ஒன்றினாலேயாகும்” என்று இறைவழிபாட்டிற்கான காரணத்தைச் சொன்னார் வாரியார்.


மறைவு
*********
உள்நாட்டில் மட்டுமின்றி, அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, லண்டன், சுவிட்சர்லாந்து என பல நாடுகளில் சொற்பொழிவுகளை நிகழ்த்தி இருக்கிறார். இதற்காகப் பல பட்டங்களையும், விருதுகளையும் பெற்றிருக்கிறார். இவற்றில் கலைமாமணி, திருப்புகழ்ஜோதி, பிரவசன சாம்ராட், இசைப்பேரரசர், அருள்மொழி அரசு போன்றவைகளைக் குறிப்பிடலாம். இப்படி பல பட்டங்களையும் விருதுகளையும் வாங்கிச் சேர்த்த வாரியார் சுவாமிகள் 1993 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் லண்டன் நகருக்குச் சொற்பொழிவாற்றச் சென்றார். அங்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுக் கொண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி லண்டனிலிருந்து திரும்பினார். 7 ஆம் தேதி அதிகாலை மும்பை வந்து சேர்ந்தார். அங்கிருந்து காலை 6 மணிக்கு சென்னைக்கு விமானத்தில் கிளம்பினார். சென்னை வருவதற்கு முன்பாகவே அவர் உயிர் இறைவனிடம் சென்று சேர்ந்துவிட்டிருந்தது. நவம்பர் 8 ஆம் தேதியில் அவர் சமாதி நிலையடைந்தார்.


சிறப்புகள்
*********
கிருபானந்த வாரியாரின் சொந்த ஊரான வேலூரை அடுத்துள்ள காங்கேயநல்லூருக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. காங்கேய நல்லூரில் உள்ள முருகன் கோவில் எதிரே “சரவண பொய்கை குளம்” என்ற மண்டபம் ஒன்றை கிருபானந்த வாரியார் ஏற்கனவே உருவாக்கி இருந்தார். அந்த மண்டபத்தில் உயரமான மேடை அமைத்து அதில் உட்கார்ந்த நிலையில் வாரியார் உடல் வைக்கப்பட்டது. தற்போது இது “திருமுருக கிருபானந்த வாரியார் திருக்கோயில்” ஆகியிருக்கிறது.
காங்கேயநல்லூரில் அவர் வாழ்ந்த வீடு இன்று நினைவில்லமாக்கப்பட்டு இருக்கிறது. இந்திய அரசு இவருடைய உருவம் பொறித்த தபால்தலையை 2006 ஆம் ஆண்டில் வெளியிட்டு சிறப்பு செய்திருக்கிறது.
சிங்கபுரி நடராஐர் சன்னதி பிரகாரத்தில் வடகிழக்கே திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமி திருமேனி நிருவப்பட்டுள்ளது.


64 வது நாயன்மார்
*****************
நாயன்மார்கள், தினம் மூன்று வேளை கோயிலுக்குப் போவார்கள். ஆனால், சிவபெருமானைப் பார்த்துப் பொன்னைக் கொடு; பொருளைக் கொடு, எனக்கு செல்வத்தைக் கொடு, மக்களைக் கொடு, வழக்கில் வெற்றியடைய வேண்டும், பதவி உயர்வு வேண்டும் என்று ஒருநாளும் கேட்க மாட்டார்கள். நாயன்மார்கள் ஆண்டவனிடத்திலே இதுவரை ஒன்றையும் கேட்டதில்லை. அதனால் அவர்கள் பெரியவர்கள். குலத்தினால் பெரியவர்கள் அல்லர். சலவைத் தொழிலாளி ஒருவர் அதிலே இருக்கிறார். திருக்குறிப்புத் தொண்ட நாயனார் தீண்டாத குலத்திலே பிறந்தவர்கள் இருக்கின்றார்கள். அப்படி என்னென்னமோ குலத்தவர்கள் எல்லாம் அங்கே தொண்டராயிருக்கிறார்கள். அவர்கள் செல்வத்தினாலே பெரியவர்கள் அல்லர். கண்ணப்ப நாயனாருக்கு எழுத்து வாசனையே கிடையாது. ஆனால், அவர்கள் எதிலே பெரியவர்கள்? வேண்டாமையிலே பெரியவர்கள். நாமெல்லாம் இந்த உலகத்திலே பெரியவர்கள் ஆக வேண்டுமென்றால் யாரிடமும், கடவுளிடம் கூட ஒன்றும் கேட்கக் கூடாது. ஆண்டவனே! எனக்கு ஒன்று கொடு என்று கேட்காதீர்கள்.
“வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டும் அஃதொப்ப தில்”
என்பார் திருவள்ளுவர். அதனாலே நாயன்மார்கள் பெரியவர்கள்.


இந்த நாயன்மார்களை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். இவர் பாடிய நாயன்மார்கள் 60 பேர். 63 பேர் அல்லர். அநேகம் பேர் 63 என்பார்கள். அவர்களெல்லாம் தெளிவாகப் படிக்காதவர்கள். 50, 60, 70 என்றுதானே தருவோம். 63 என்று யார் தருவார்கள்?
சுவாமிமலைக்குப் படிகள் 60. ஆண்டுகள் 60. மனிதனுக்கு விழா செய்வதும் 60 ஆம் ஆண்டு. ஒரு நாளைக்கு நாழிகை 60. ஒரு மணிக்கு நிமிடம் 60. ஒரு நிமிடத்துக்கு வினாடி 60. அப்படியானால் கணக்கு 60 என்றுதான் வரும். 63 வராது. சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமான் அடியெடுத்துக் கொடுக்கப் பாடிய நாயன்மார்கள் 60 பேர். அப்புறம் எப்படி 63 பேர் ஆனது? சுந்தரமூர்த்தி நாயனார் மறைந்து 100 வருடங்கள் கழித்து நம்பியாண்டார் நம்பி அடிகள் எனும் ஆதிசைவ இளைஞர் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய 60 நாயன்மார்களை சற்றி விரிவாகப் பாடுகிறார். அப்போது அவர் 60 நாயன்மார்களைப் பாடி, அந்த 60 நாயன்மார்களைப் பாடிக் கொடுத்த சுந்தரர், அவரைப் பெற்றுக் கொடுத்த
அவரது தந்தை, தாயைச் சேர்த்து 63 ஆக மாற்றினார்.

வாரியார் 60 நாயன்மார்கள் 63 நாயன்மார்கள் ஆன வரலாற்றைச் சொன்னார்கள். வாரியாரைப் பற்றி முழுமையாக அறிந்தவர்கள் சொல்கிறார்கள் நாயன்மார்கள் 60 என்றும், 63 என்றும் சொல்வது தவறு. மொத்தம் 64 நாயன்மார்கள். 64 வது நாயன்மார் வேறு யாருமல்ல. திருமுருக கிருபானந்த வாரியார்தான். ஆன்மிகப் பற்றுடைய பலரும் சொல்கிறார்கள். ஆயகலைகள் 64 என்று சொல்வதுண்டு. அதுபோல் நாயன்மார்கள் 64 என்று சொல்வதில் தவறேதுமில்லை. அறுபத்து நான்காம் நாயன்மார் திருமுருக கிருபானந்த வாரியார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. வாரியாரும் நாயன்மார்களைப் போல் இறைவனிடம் எதையும் வேண்டாத பெரியாராகவேதான் வாழ்ந்தார். மனித வாழ்க்கையில் பிற்காலத்திலும் நினைத்துப் போற்றக்கூடியவர்களாக வாழ்பவர்கள் சிலரே. அந்த மிகச் சிலருள் வாரியார் சுவாமிகளும் ஒருவர் என்பதை நாமும் நினைவில் கொள்வோம்.

Wednesday 18 June 2014

பக்தியை பெருக்குங்கள்...!!!

தராசு முள் நேராக ஒரே நிலையில் இருக்க வேண்டுமானால், அதன் இரண்டு பக்கத் தட்டுகளும் ஒரே பளு உள்ளதாக இருக்க வேண்டும். தட்டுகளில் உள்ள பளு கூடுதலாகவோ, குறைவாகவோ இருந் தால், நேராக நிற்காமல் இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் தராசு முள் ஆடிக் கொண்டிருக்கும்.

அதுபோல, மனம் ஒரே நிலையில் இருக்க வேண்டுமானால், மனதின் அடித் தளத்தில் விருப்பு, வெறுப்பு ஏதுமின்றி இருக்க வேண்டும்; அதில் ஏற்றத் தாழ்வு இருப்பின், மனமும் அலைபாயும்.

ஒரு தட்டில் ஆசைகள் அனைத் தையும் வைத்து, மற்றொரு தட் டில் பக்தியை வைத்துப் பார்த் தால், பக்தியே பளுவானது; வலுவானது. மற்ற விஷயங் களில் ஆசையை விட்டு, பகவானுடைய சரணங்களில் ஆசை வைத்தால் அவனையே பிடித்து விடலாம்.

சரணடைந்தவர்களை அவன் உதறித் தள்ளுவதில்லை; கை தூக்கி விடுகிறான். பக்தி செய்து சரணடைந்தால், பகவான் முக்தியளிக்கிறான். நமக்கு இப்போது கிடைத் துள்ள மனிதப் பிறவி புதிதாக முதன் முதலாகக் கிடைத்ததல்ல; இதற்கு முன் எத் தனையோ பிறவி எடுத்தாகி விட்டது. ஆத்மா அழிவற்றது. அது, மேலும், கீழும் போய்ப் போய் வருகிறது. கர்ம வினை தீர்ந்து, புண்ணிய பலன் ஏதாவது இருந்தால், இன்னும் கொஞ்சம் உயர்ந்த ஜென்மா கிடைக்கிறது.

இப்படி புண்ணிய பலன் கூடு தலாக, கூடுதலாக, பட்சி, பிராணி, பசு, மனிதன் என்று வரிசையாக பிறப்பு வருகிறது. மனித ஜென்மாவில் கூட எத்தனையோ மனித ஜென்மா எடுத்து புண்ணியம் சேர்ந்திருந்தால், இந்த மனித ஜென்மாவிலும் சுகபோகங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு! புண்ணிய காரியம் செய் வதற்கும் பிராப்தம் இருக்க வேண்டும்; அது இல்லாவிடில், மனம் அதில் ஈடுபடாது; வேறு எதிலோதான் ஈடுபடும்.

புண்ணிய காரியம் என்றால், தான – தர்மங்கள் செய்வது மட்டுமல்ல; தெய்வ பக்தி, தெய்வ தரிசனம், ஆலய தரிசனம், புண்ணிய தீர்த்த ஸ்நானம் இவைகளுக்கும் புண்ணியம் உண்டு. இதையும் தவிர, மகான்கள் தரிசனம் பெரிய புண்ணியம். நாம் இப்போது மனிதப் பிறவியை அடைந்துள்ளோம். இதற்கு முன், ஜென்மாவில் நாம் மேற்கூறிய எதையாவது செய்திருக்கலாம்; மகா புருஷர் களை தரிசித்திருக்கலாம். எல்லா காலங்களிலும் மகா புருஷர்கள் இருந்திருக்கின்றனர். ஏதோ ஒரு காலத்தில், யாரோ ஒருவரை நாம் தரிசித்திருக்கலாம்; வணங்கி இருக்கலாம்.

அது நமக்கு தெரியாவிட்டாலும் கூட, இப்போது கிடைத் துள்ள மனித ஜென்மாவையும், அனுபவிக்கும் சுகங்களையும் வைத்துப் பார்த்தால், இதற்கு முன் யாரையோ தரிசித்த புண் ணியம்தான் காரணம் என்று யூகிக்கலாம். அதே போல, இந்த ஜென் மாவிலும் இப்போதுள்ள மகான்களையும் தரிசித்து வணங்கி விட்டால், தெய்வபக்தி செய்து வந்தால், அடுத்த பிறவி இன்னும் சிறப்பாக இருக்கும்.

உலக மாயையில் சிக்காமல், அஞ்ஞானம் விலகி, ஞானம் ஏற்பட்டு சர்வமும் ஈஸ்வர மயம், எல்லாமே பரம்பொருள் என்று எண்ணுகிற நிலையெல்லாம் வந்த பிறகு தான் முக்தி என்கிற மோட்ச சாம்ராஜ்யத்தை அடைய முடியும். இப்போது அதன் எல்லைக் கோடு வரையிலாவது போக முடியுமா என்பதுதான் கேள்வி.

மகான்கள் தரிசனம், தெய்வ பக்தி இவைகளை விருத்தி செய்து கொண்டே போனால், எப்போதோ, எந்தக் காலத் திலோ பகவானோடு சேர்ந்து விடலாம். முயற்சி செய்ய வேண்டும்; நம்பிக்கை இருக்க வேண்டும்.
- வைரம் ராஜகோபால்

Sunday 25 May 2014

வாழ்கை சுழற்சி – பட்டினத்தார் பாடல்!

பிறந்தன இறக்கு மிறந்தன பிறக்கும்
தோன்றின மறையு மறைந்தன தோன்றும்
பெருந்தன சிறுக்குஞ் சிறுத்தன பெருக்கும்
உணர்ந்தன மறக்கு மறந்தன வுணரும்
புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும்








அருந்தின மலமாம் புனைந்தன அழுக்காம்
உவப்பன வெறுப்பாம் வெறுப்பன உவப்பாம்
என்றிவை யனைத்து முணர்ந்தனை யன்றியும் - பட்டினத்தார்



பிறந்த உயிர்கள் அனைத்தும் இறக்கின்றன் இறந்த உயிர்கள் மீண்டும் பிறக்கின்றன. பெரிய பொருள் சிறிய பொருளாகும் சிறிய பொருள் பெரியவையாகும். அறிந்தவை அனைத்தும் மறந்துபோகும் மறந்தவை அனைத்தும் தெரியவரும். சேர்ந்தவை அனைத்தும் பிரியும். பிரிந்தவை அனைத்தும் சேரும். உண்டவை அனைத்தும் மலமாம். புனைந்த அனைத்தும் அழுக்கு ஏறிவிடுமாம். இன்று விரும்புபவை நாளை வெறுக்க தோன்றும் நேற்று வெறுத்தவை இன்று விரும்ப தோன்றும் என்று அனைத்தையும் உணர்ந்து விட்டேன்,

Monday 12 May 2014

நோய் தீர்க்கும் சதுரகிரி மலை..!


சதுரகிரி மகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக்கோயிலாகும்.

நோய் தீர்க்கும் மலை: சதுரகிரி மலையி...ல் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது.





இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள்.

சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர்.

திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர்.

தாணிப்பாறை அடிவாரம் - கருப்பர் சந்நிதி அருகே உள்ள தீர்த்தம்

* மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை "சஞ்சீவி மலை' என்கின்றனர்.

*சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது.

*ஆடி அமாவாசை முக்கிய விழா. தை அமாவாசை, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகிய நாட்களிலும் அதிக கூட்டம் இருக்கும்.

* பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது.

*இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்துள்ளார்கள்.

*மகாலிங்கம் கோயிலின் வடக்கே "ஊஞ்சல் கருப்பண சாமி' கோயில் உள்ளது.

* சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1 மணிக்கு அபிஷேகம் துவங்கும்.

* ஆடி அமாவாசை தவிர மற்ற அமாவாசை நாட்களில் தேனும், தினைமாவும் பிரசாதமாக தரப்படுகிறது.

* சதுரகிரி மலைக்கு மின்சார வசதி கிடையாது. ஜெனரேட்டர் பயன்படுத்துகின்றனர்.

இருப்பிடம்:

மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் பஸ்களில் சென்றால், தாணிப்பாறை விலக்கில் இறங்கலாம். இங்கிருந்து 7 கி.மீ., தூரம் சென்றால் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வரும். அங்கிருந்து மலை ஏறி, 10 கி.மீ., நடந்தால் மகாலிங்கத்தை தரிசிக்கலாம்.
அல்லது , மதுரையிலிருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் - செங்கோட்டை செல்லும் பஸ் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் , செங்கோட்டை செல்லும் பஸ்ஸில் ஏறி - கிருஷ்ணன் கோவில் நிறுத்தத்தில் இறங்கி - அங்கிருந்து வத்திராயிருப்பு செல்லுங்கள். ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் பேருந்து வசதி உள்ளது.
அங்கிருந்து தாணிப் பாறைக்கு - மினிபஸ் அல்லது ஆட்டோவில் சென்று விடுங்கள்.

திறக்கும் நேரம்:

காலை 6- 12 மணி, மாலை 4- இரவு 9 மணி. விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடும்.போன்: 98436 37301, 96268 32131

மலைக்கு மேலே - சாப்பாடு பற்றிய கவலை வேண்டாம். எந்த நேரமும், உங்கள் வயிறை குளிரவைக்க " கஞ்சி மடம் ' உள்ளது. உங்களுக்கு குறைந்த பட்சம், கஞ்சியோ , கூழோ , பழைய சோறோ - நிச்சயம் கிடைக்கும். 24 மணி நேரமும் என்பதுதான் விசேஷம். மிகப் பெரிய குழுவாக சென்றால், முன்கூட்டியே சொல்லி விடுங்கள். சுடச்சுட சாதம் கிடைக்கும்.

சதுரகிரி தல வரலாறு : சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.

வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு "சடதாரி' என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.

சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார்.

சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான்.
சிவபெருமான் அவனை தேற்றி, "" நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன்,'' என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி "மகாலிங்கம்' என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்.சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேற வேண்டும்.
மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன.
இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு.
இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தான இடம். இதன் பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது. இதை ஒட்டிய குகையில் உள்ளே ஒரு சிறிய லிங்கம் உள்ளது. இதை நீங்கள் காணும்போது , மெய் சிலிர்க்கும் அனுபவம் உங்களுக்கு ஏற்படுவது உறுதி.

கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது. கொஞ்சம் இளவட்ட ஆளுங்க போக முடியும். ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால் , அனைவரும் முயற்சிக்க வேண்டாம்.

இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது. இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள். பின்னர், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசித்து, மகாலிங்கம் கோயிலை அடையலாம். மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.

இரட்டை லிங்கம்: ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன் மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. அவரது மனைவி ஆண்டாள். பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர். இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். இவர்கள் முன்பு சிவன் தோன்றினார்.


""சிவபெருமானே! தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள், என்பதை என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும்,''என வேண்டினார் வியாபாரி. சிவன் ஆண்டாளிடம் சென்றார். அவளோ, ""நான் உம்மை நினைத்ததே இல்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன்,'' என்றாள்.

அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.

பிலாவடி கருப்பு: வணிகர் ஒருவருக்கு சிவன் கோயில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால், பணம் போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. முனிவர் ஒருவர், ""சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும்,'' என்றார்.

வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாதரை தரிசித்தார். அவர் அங்குள்ள சில மூலிகைகளைக் கொண்டு உலோகங்களை தங்கமாக்கி அவனிடம் கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்க பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார். இந்த கிணற்றுக்கு காவலாக கருப்பசுவாமியை நியமித்தார். இவரது சன்னதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது. இதனால், இவரை "பிலாவடி கருப்பர்' என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது.
பெரிய மகாலிங்கம்: நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை "பெரிய மகாலிங்கம்' என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது. சாதாரண நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது. சிவராத்திரியன்று மட்டும் பெரிய லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

தவசிப்பாறை: மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம். இது கடல்மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது. கோயிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும். இது மிகவும் சிரமமான பயணம். பாறைக்கு செல்லும் வழியில் "மஞ்சள் ஊத்து' தீர்த்தம் உள்ளது.


தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகை உள்ளது. குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படியான துவாரம் உள்ளது. உள்ளே சென்ற பிறகு, பத்து பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது. இதனுள் ஒரு லிங்கம் உள்ளது. மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும். இந்த குகையில் தான் 18 சித்தர்களும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது. குகைக்கு மேலே 9 பெரிய பாறாங்கற்கள் உள்ளன. இவற்றை "நவக் கிரக கல்' என்கிறார்கள். இதற்கு அடுத்துள்ள "ஏசி' பாறையின் கீழ் அமர்ந்தால், கடும் வெயிலிலும் மிகக் குளுமையாக இருக்கும். தவசிப் பாறையிலிருந்து கிழக்குப்பக்கமாக கீழிறங்கும் வழியில் "வெள்ளைப்பிள்ளையார்' பாறை உள்ளது. பார்ப்பதற்கு விநாயகர் போல் தெரியும். இங்குள்ள ஒரு மரத்தின் இடையில் அரையடி உயர பலகைக்கல் விநாயகர் சிலை உள்ளது. அருகில் நடுக்காட்டு நாகர் சன்னதி உள்ளது.

சுந்தரமூர்த்தி

கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும். சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை "கும்ப மலை' என்கின் றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுந்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் "சுந்தரமூர்த்தி லிங்கம்' எனப்படுகிறது. அருளை வழங்குவது "சுந்தரமகாலிங்கம்', பொருளை வழங்குவது "சுந்தரமூர்த்தி லிங்கம்' என்று கூறுவர். சதுரகிரி கோயிலின் நுழைவுப்பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது. இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.

பார்வதி பூஜித்த லிங்கம் :

சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய்விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள். தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து "அர்த்தநாரீஸ்வரர்' ஆனார் என தல வரலாறு கூறுகிறது. பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும்

இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர்.

இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். 18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது. செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள்.இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் வனகாளி கோயில் உள்ளது.
லிங்க வடிவ அம்பிகை

சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் "ஆனந்தவல்லி' என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள். சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.
சதுரகிரியில் தீர்த்தங்கள்

சந்திர தீர்த்தம்

சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில் 'சந்திர தீர்த்தம்' இருக்கிறது.இந்த சந்திர தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி ஒரு முறை நீராடினால் கொலை, காமம், குரு துரோகம் போன்ற பஞ்சமா பாதங்களிலிருந்து நீங்கி புண்ணியம் பெறலாம்.

கெளண்டின்னிய தீர்த்தம்.

சந்திர தீர்த்தத்திற்கு வடபுறத்தில் உள்ளது இந்தத் தீர்த்தம். இது தெய்வீகத் தன்மை வாய்ந்த நதியாகும். வறட்சியுற்ற காலத்தில் தேவர்களும், ரிஷிகளும் சிவபெருமான் வேண்ட, ஈசன் தமது சடை முடியில் உள்ள கங்கைலிருந்து ஒரு துளி எடுத்து நான்கு கிரிகளுக்கும் மத்தியில் விட்டு, லிங்கத்தில் மறைந்தார் என்பது ஐதீகம்.

கங்கை, கோதாரி, கோமதி, சிந்து, தாமிரவருணி, துங்கபத்திரை முதலிய புண்ணிய நதிகளுக்கு நீராடிய பயனுண்டு. இந்த நதியில் நீராடுவதால் சகல பாவங்களும் தீர்வதால் இதற்கு ''பாவகரி நதி'' என்னும் பெயரும் உண்டு.
சந்தன மகாலிங்கம் தீர்த்தம்.

இச்சதுரகிரியின் மேல் 'காளிவனம்' என்கிற இருண்டவனம் ஒன்றுள்ளது. அவ்வனத்திலிருந்து வருகிற தீர்த்தம் சந்தனமகாலிங்க தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. உமையாள் பிருங்க முனிவர் தம்மை வணங்காமல் ஈசனை வணங்கியமையால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாகச் சிவபெருமானை விட்டுப் பிரிந்து, அர்த்த நாரீஸ்வரர் என்கிற சிவசக்தி கோலத்தில் இருக்க வேண்டி சதுரகிரிக்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகத்திற்கு வரவழைத்த ஆகாய கங்கையாகும்.

இப்புண்ணிய தீர்த்ததில் நீராடினால், எந்தப் பாவமும் நீங்கி முக்தி கிடைக்கும்.
இது தவிர, சதுரகிரியில் பார்வதி தேவியின் பணிப்பெண்களான சப்த கன்னியர்கள் தாங்கள் நீராடுவதற்கு உண்டாக்கிய 'திருமஞ்சனப் பொய்கை' உண்டு.

காலாங்கிநாதரால் உண்டாக்கப்பட்ட 'பிரம்மதீர்த்தம்' ஒன்று சதுரகிரி மலைக்
காவலராகிய கருப்பணசுவாமி சன்னதி முன்பாக இருக்கிறது. இது தவிர கோரக்கர், இராமதேவர், போகர் முதலிய மகரிஷிகளால் உண்டாக்கப்பட்ட 'பொய்கைத் தீர்த்தம்'', ''பசுக்கிடைத் தீர்த்தம்'', 'குளிராட்டித் தீர்த்தம்' போன்ற அனேக தீர்த்தங்கள் சதுரகிரி மலையில் உள்ளன.மகாலிங்கம் கோயிலிலிருந்து சாப்டூர் செல்லும் வழியில் உள்ள குளிராட்டி பொய்கையில் நீர் வற்றாது. இதில் குளித்தால் கிரக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
மகரிஷிகளும், சித்தர்களும் இன்றும் அருவுருவாக வாழ்ந்தும் அருள் வழங்கும் வண்ணம் சதுரகியில் வீற்றிருக்கிறார்கள்.
பொதுவாகவே மலைகளின் மேல், மனிதர்களுக்கு ஆயுளும், ஆரோக்கியமும் தரும் அற்புதமான பல மூலிகைகளும், மருத்துவ குணம் நிறைந்த மரம் செடி கொடிகள் யாவும் இருக்கின்றன. இவைகளைத் தழுவி வரும் காற்று நம் மீதுபட்டவுடன் உடலில் உள்ள நோய்கள் தீர்கின்றன.

அபூர்வ மூலிகைகள் :

இங்கே கிடைக்கும் பல அற்புத மூலிகைகளில் முறிந்த எலும்பை கூடவைக்கும் மூலிகை இலை கூட இங்கே உள்ளது . முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி, இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும்.

பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சமும், சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள், மூலிகைகள், இலைகள் இம்மலையில் மேல் உள்ளன. இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.

தவிர கோரக்க முனிவரால் 'உதகம்' என்று குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு. மருத்துவ குனம் கொண்ட மரம், செடிகொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கியசுனைகள் இருக்கிறது.

இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் 'உதகம்' என்று பெயர். பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர்போல் காணப்படும். இந்த உதகநீர் மருத்துவ குணங்களைக் கொண்டது. இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது.
விபரங்கள் அறிந்தவர்க்ளின் மூலமும், துணையோடு அந்நீரை மருந்தாக
பயன்படுத்த வேண்டும்.

சதுரகிரி மலையில் தபசு குகைக்கு அருகில் கற்கண்டு மலைக்குக்கீழ் அடிவாரத்தில் சுணங்க விருட்சம் என்னும் மரம் உள்ளது.
இந்த மரத்தின் காய் நாய்க்குட்டி போலிருக்கும். அந்தக் காய் கனிந்து விழும்போது நாய்க்குட்டி குரைப்பதைப் போல் இருக்கும். விழுந்த கனி 10 வினாடிக்குப் பிறகுமறுபடியும் அம்மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும்.
அதேபோல் 'ஏர் அழிஞ்ச மரம்' என்றொரு மரம் உண்டு.

இந்த மரத்தில் காய்க்கும் காய் முற்றியவுடன் கீழே விழுந்து விடும். விழுந்த காய் காய்ந்து அதன் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும். இடையில் மழை, காற்றினால் மரத்தை விட்டு தள்ளிப்போய் இருந்தாலும் மேல் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில்
வந்து ஒட்டிக்கொள்ளும்.

இந்த 'ஏர் அழிஞ்ச மரத்தின்' கொட்டைகளை எடுத்து எண்ணையில ஊறவைத்து அதன் மூலம் கிடைக்கும் மையை உபயோகித்து வசியம் செய்வது ஒரு வகை.

சதுரகிரியில் நந்தீஸ்வரர் வனத்தில் கனையெருமை விருட்சம் என்றொரு மரமுண்டு. அம்மரத்தினடியில் யாராவது ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமை போல் கனைக்கும். அம்மரத்தை வெட்டினால், குத்தினால் பால் வரும்.
இதேபோல் மற்றொரு விருட்சம் மரமும் உண்டு. இந்தவிருட்சம் நள்ளிரவில் கழுதைப் போல் கத்தும். வெட்டினால் பால் கொட்டும். நவபாஷண சேர்க்கையில் இந்த விருட்சக மரத்தின் பாலும் முக்கியமான சேர்க்கையாகும்.

இவை எல்லாவற்றையும் விட தூக்கி சாப்பிடும் விஷயம் ஒன்று உள்ளது. மலையில் மிக அடர்ந்த பகுதியில் - " மதி மயக்கி வனம்" என்ற பகுதி உள்ளது. இங்கே உள்ளே சென்றவர்கள் , மதியை மயக்கி அவர்கள் வெளியே வரவே முடியாது என்று கூறுகின்றனர். நான் கேள்விப்பட்ட வரை , எங்கள் அருகில் இருக்கும் கிராமத்துக் காரர் ஒருவர் வழி தவறி உள்ளே சென்று மாட்டிக்கொண்டு விட்டார். "மகாலிங்கம் காப்பாத்து, காப்பாத்து" என்று மூன்று நாட்கள் கதறி, ஒரு வழியாக அந்த வனத்திலிருந்து வெளியே வந்து விட்டார். அடர்ந்த காடு, நிறைய பூச்செடிகள் இருந்தது. எதுவும் கோவில் கூட இல்லை. ஆட்களே யாரும் இல்லை. பசியே தெரியவில்லை. வெளியே வந்தது ஆண்டவன் அருள் என்று, இன்றும் அவர் திரும்ப திரும்ப புலம்பிக் கொண்டே இருக்கிறார்.

இன்றும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் - சித்தர்கள், ரிஷிகள் - மகாலிங்க பூஜை செய்ய வருகின்றனர். கூட்டம் கூட்டமாக நட்சத்திரங்கள் மலைப்பகுதிகளில் விழுகின்றன. வீடியோ காமிராக்களில் அதை நிறைய பகதர்கள் பதிவு செய்து இருக்கின்றனர். ஏற்கனவே நாம் " கட்டை விரல் அளவில் காட்சி தந்த சித்தர் பற்றிய பதிவை வாசகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளோம். இவை அத்தனையும் சர்வ நிஜம். இறை நம்பிக்கை உள்ள பக்தர்கள் , வாழ்வில் ஒரு முறையேனும் இந்த மகாலிங்கத்தையும் , சந்தன மகா லிங்கத்தையும் - மனமுருக பூஜித்து வழிபட்டு வாருங்கள். நீங்கள் நினைத்ததை சாதிக்கும் வல்லமையை அந்த சிவம் உங்களுக்கு அளிக்கும்.
உங்கள் தேடல் , பக்தி உண்மை எனில் - நீங்கள் மனதார நினைத்து வழிபாடு செய்யும் சித்தர் தரிசனம் உங்களுக்கு சதுரகிரியில் நிச்சயம் கைகூடும். இதை நிறைய பக்தர்கள் அனுபவித்து இருப்பதால் , இப்போதெல்லாம் சதுரகிரியில் கூடும் கூட்டத்திற்கு குறைவில்லை..

சதுரகிரி மலை - ஒரு ஆன்மிக உலா

சாதாரண மலைகளைப் போலல்ல இது. வீரியம் நிறைந்த வினோதமான மலை. கணக்கற்ற இரகசியங்களைத் தன்னுள்ளே பொதித்துக் கொண்டு அமைதியாய்க் காணப்படும் அபூர்வ மலை.

சித்தர்களின் இராஜ்ஜியமாகவும், அபாயகரமான காட்டுவாழ் விலங்கினங்களின் புகலிடமாகவும், அபூர்வ சக்திகள் படைத்த மூலிகைகளின் வாழ்விடமாகவும் விளங்கும் இம்மலை, பரம்பொருள் சிவபரமாத்மாவின் அருட்கடாட்சம் பெற்றபடியால் சிவன்மலை என்றும் மகாலிங்க மலை என்றும் அழைக்கப்படுகிறது.

சிவனும் பார்வதி தேவியும் இங்கே நிரந்தரமாகத் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சித்தர்களுக்கு வாக்குத் தந்திருப்பதால் இவ்விடம் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.

இம்மலை அஷ்டமாசித்திகள் பெற்ற பதினெட்டு சித்தர்களின் தலைமையிடமாகவும், மற்றும் பல சித்தர்கள் கூடி தத்தம் ராய்ச்சிகளை விவாதிக்கும் இடமாகவும் அறியப்படுகிறது. இம்மலையிலுள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் தங்கியிருந்து சிவனை வணங்கி வழிபட்டு வந்ததுடன் மக்களின் நோய் தீர்க்கும், துன்பங்களைக் களையும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ராய்ச்சிகளிலும் சித்தர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

சித்தர்பூமியாம் சதுரகிரியில் எண்ணற்ற மூலிகைகள் நிறைந்த வனம் உள்ளது. இன்றும் இம்மலையில் சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. சித்தர்களின் அதிர்வலைகள் மலையெங்கும் நிறைந்திருப்பதால் அதில் சிறிதாவது தமது உடலில் ஒட்டட்டும் என பக்தர்கள் விரும்பி இங்கு வருகின்றனர்.

Monday 5 May 2014

நெற்றியில் திருநீறு பூசுவதால் என்ன நன்மை?

நெற்றியில் திருநீறு தரித்துக் கொள்வது உயர்ந்த தத்துவத்தை விளக்குகிறது. நாடாண்ட மன்னனும், மாசறக் கற்றவரும் கடைசியில் சாம்பலாகத் தான் போகப் போகிறோம்.





இந்த வாழ்க்கை மாயமானது என்பதை விபூதி உணர்த்துகிறது. பிறக்கும்போதும் மண்ணிலே பிறந்தோம். சாகும்போது மண்ணிலே தான் சாகப் போகிறோம்.


மண்ணிலே பிறந்த மரம் இறுதியில் மண்ணிலேயே மட்கி மண்ணோடு மண்ணாகத் தான் போகிறது. நம்மை முடிவில் அடக்கிக் கொள்ளப் போகிற தத்துவம் அதுதான். இதை நினைவுபடுத்திக் கொள்ளவே, நெற்றியில் விபூதி அணிகிறோம். மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதனம் கூட. சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள்.

Friday 2 May 2014

பிள்ளையார் கதை பாடல்...!!

பிள்ளையார் கதை பாடல்...!!!
இப் பாடலை 21 நாளும் விரதமிருந்து துதி
செய்ய நினைத்த காரியம் கைகூடும் .சகல
செல்வயோகம் மிக்க பெரு வாழ்வு வாழலாம் ..!!!






சிறப்புப் பாயிரம்

செந்தமிழ் முனிவன் செப்பிய காதையுங்
கந்த புராணக் கதையில் உள் ளதுவும்
இலிங்க புராணத்து இருந்தநற் கதையும்
உபதேச காண்டத்து உரைத்தநற் கதையும்
தேர்ந்தெடுத்து ஒன்றாய்த் திரட்டிஐங் கரற்கு
வாய்ந்தநல் விரத மான்மியம் உரைத்தான்
கன்னியங் கமுகிற் கயலினங் குதிக்குந்
துன்னிய வளவயற் சுன்னா கத்தோன்
அரங்க நாதன் அளித்தருள் புதல்வன்
திரம்பெறு முருகனைத் தினந்தொறும்
வரம்பெற வணங்கும் வரதபண் டிதனே.

காப்பு

கரும்பு மி்ளநீருங் காரெள்ளுந் தேனும்
விரும்பு மவல்பலவும் மேன்மே - லருந்திக்
குணமுடைய னாய்வந்து குற்றங்க டீர்க்குங்.
கணபதியே யிக்கதைக்குக் காப்பு.

திருவிளங்கு மான்மருகா சேவதனி லேறி
வருமரன்றா னீன்றருளு மைந்தா - முருகனுக்கு
முன்பிறந்த யானை முகவா வுனைத் தொழுவேன்
என்கதைக்கு நீயென்றுங் காப்பு.

விநாயகர் துதி

திருவாக்குஞ் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரு மானை முகத்தோனைக்
காதலாற் கூப்புவர்தங் கை.

ஒற்றை யணிமருப்பு மோரிரண்டு கைத்தலமும்
வெற்றி புனைந்த விழிமூன்றும் - பெற்றதொரு
தண்டைக்கால் வாரணத்தைத் தன்மனத்தி லெப்பொமுதுங்
கொண்டக்கால் வராது கூற்று.

சப்பாணி

எள்ளு பொரிதேன் அவல்அப்பமிக்கும் பயறும் இளநீரும்
வள்ளிக் கிழங்கும் மாம்பழமும் வாழைப்பழமும் பலாப்பழமும்
வெள்ளைப்பாலும் மோதகமும் விரும்பிப்படைத்தேன் சந்நிதியில்
கொள்ளைக் கருணைக் கணபதியேகொட்டி அருள்க சப்பாணி.

சண்டப் பெருச்சாளி ஏறிச் சடைகொண்டு வையத் துலாவி
அண்டத்து அமரர் துதிக்க அடியார்க்கு அருளும் பிரானே
எண்திக்கும் அன்பர்கள் பார்க்க இணையற்ற பேரொளி வீசக்
குண்டைக் கணபதி நம்பி கொடுங்கையாற் சப்பாணி கொட்டே.

'சரஸ்வதி துதி'

புத்தகத் துள்ளுறை மாதே பூவில் அமர்ந்திடு வாழ்வே
வித்தகப் பெண்பிள்ளாய் நங்காய் வேதப் பொருளுக்கு இறைவி
முத்தின் குடைஉடை யாளே மூவுல குந்தொழுது ஏத்துஞ்
செப்புக் கவித்த முலையாய் செவ்வரி ஓடிய கண்ணாய்
தக்கோலந் தின்னும் வாயாய் சரஸ்வதி என்னுந் திருவே
எக்காலமும் உன்னைத் தொழுவேன் இயல்/இசை நாடகம் என்னும்
முத்தமிழ்க் கல்விகள் எல்லாம் முழுதும் எனக்கருள் செய்துஎன்
சித்தந் தனில்நீ இருந்து திருவருள் செய்திடுவாயே.

அதிகாரம்
பொன்னிறங் கடுக்கும் புனற்செறி குடுமித்
தென்மலை யிருந்த சீர்சால் முனிவரன்
கந்த மும்மதக் கரிமுகன் கதைதனைச்
செந்தமிழ் வகையாற் றெளிவுறச் செப்பினன்
அன்னதிற் பிறவினில் அரில்தபத் திரட்டித்
தொன்னெறி விளங்கச் சொல்லுவன் கதையே.
[அரில் = குற்றம்.]

நூல்:

மந்தர கிரியில் வடபால் ஆங்கு ஓர்
இந்துவளர் சோலை இராசமா நகரியில்

அந்தணன் ஒருவனும் ஆயிழை ஒருத்தியுஞ்
சுந்தரப் புதல்வரைப் பெறுதல் வேண்டிக்

கடவுள் ஆலயமுங் கடிமலர்ப் பொய்கையுந்
தடநிழற் பள்ளியுந் தாம்பல சமைத்துப்

புதல்வரைத் தருகெனப் பொருப்புஅரசு ஈன்ற
மதர்விழி பாகனை வழிபடு நாளின்

மற்றவர் புரியும் மாதவங் கண்டு
சிற்றிடை உமையாள் சிவனடி வணங்கிப் [10]

பரனே சிவனே பல்லுயிர்க்கு உயிரே
அரனே மறையவற்கு அருள்புரிந்து அருளென

அந்தஅந் தணனுக்கு இந்தநற் பிறப்பில்
மைந்தரில்லை யென்று மறுத்து அரன் உரைப்ப

எப்பரி சாயினும் எம்பொருட்டு ஒருசுதன்
தப்பிலா மறையோன் தனக்கு அருள் செய்கென

எமையா ளுடைய உமையாள் மொழிய
இமையா முக்கண் இறைவன் வெகுண்டு

பெண்சொற் கேட்டல் பேதைமை யென்று
பண்சொற் பயிலும் பாவையை நோக்கிப் [20]

பேதாய் நீபோய்ப் பிறவென மொழிய
மாதுஉமை யவளும் மனந்தளவு உற்றுப்

பொன்றிடு மானுடைப் புன்பிறப்பு எய்துதல்
நன்றல என்றே நடுக்கமுற்று உரைப்பக்

கறைமிடற்று அண்ணல் கருணை கூர்ந்து
பிறைநுத லவற்குநீ பிள்ளை யாகச்

சென்று அவண் வளர்ந்து சிலபகல் கழித்தால்
மன்றல்செய் தருள்வோம் வருந்தலை யென்று

விடைகொடுத்து அருள விலங்கன்மா மகளும்
பெடைம யிற்சாயற் பெண்மக வாகித் [30]

தார்மலி மார்பன் சதுர்மறைக் கிழவன்
சீர்மலி மனைவி திருவயிற் றுதித்துப்

பாவை சிற்றிலும் பந்தொடு கழங்கும்
யாவையும் பயின்ற இயல்பின ளாகி

ஐயாண்டு அடைந்தபின் அன்னையும் அத்தனும்
மையார் கருங்குழல் வாள்நுதல் தன்னை

மானுட மறையோற்கு வதுவை செய்திடக்
கானமர் குழலியைக் கருதிக் கேட்பப்

பிறப்பிறப் பில்லாப் பெரியோற்கு அன்றி
அறத்தகு வதுவைக்கு அமையேன் யான் என [40]

மற்றவன் தன்னைஉன் மணமக னாகப்
பெற்றிடல் அரிதெனப் பெயர்த்து அவர் பேச

அருந்தவ முயற்சியால் அணுகுவேன் யானெனக்
கருந்தட நெடுங்கண் கவுரி அங்கு உரைத்து

மருமலி கமல மலர்த்தடத்து அருகில்
தருமலி நிழல் தவச் சாலையது அமைத்துப்

பணியணி பற்பல பாங்கியர் சூழ
அணிமலர்க் குழல் உமை அருந்தவம் பயில

அரிவைதன் அருந்தவம் அறிவோம் யாமென
இருவரு மறியா விமையவர் பெருமான் [50]

மான் இடம் ஏந்தும் வண்ணமது ஒழிந்து
மானிட யோக மறையவன் ஆகிக்

குடையொடு தண்டுநற் குண்டிகை கொண்டு
மடமயில் தவம்புரி வாவிக் கரையில்

கண்ணுதல் வந்து கருணை காட்டித்
தண்நறும் கூந்தல் தையலை நோக்கி

மின்பெறு நுண்ணிடை மெல்லிய லாய்நீ
என்பெறத் தவமிங்கு இயற்றுவது என்றலும்

கொன்றை வார்சடையனைக் கூடஎன்று உரைத்தலும்
நன்று எனச் சிரித்து நான்மறை யோனும் [60]

மாட்டினில் ஏறி மான்மழுத் தரித்துக்
காட்டினிற் சுடலையிற் கணத்துடன் ஆடிப்

பாம்பும் எலும்பும் பல்தலை மாலையுஞ்
சாம்பரும் அணிந்து தலையோடு ஏந்திப்

பிச்சைகொண்டு உழலும் பித்தன் தன்னை
நச்சிநீ செய்தவம் நகைதரும் நுமக்கெனப்

பூங்கொடி அருந்தவம் பூசுரன் குலைத்தலும்
ஆங்குஅவள் நாணமுற்று அணிமனை புகுதச்

சேடியர் வந்து செழுமலர் குழலியை
வாடுதல் ஒழிகென மனமிகத் தேற்றிச் [70]

சிந்துர வாள்நுதற் சேடியர் தாம்போய்த்
தந்தைதா யிருவர் தாளினை வணங்கி

வாவிக் கரையில் வந்தொரு மறையோன்
பாவைதன் செங்கையைப் பற்றினான் என்றலுந்

தோடு அலர்கமலத் தொடைமறை முனியை
ஆடக மாடத்து அணிமனை கொணர்கஎன

மாடக யாழ்முரல் மங்கையர் ஓடி
நீடிய புகழாய் நீஎழுந்து அருள் என

மைம்மலர்க் குழலி வந்துஎனை அழைக்கில்
அம்மனைப் புகுவன் என்று அந்தணன் உரைத்தலும் [80]

பொற்றொடி நீபோய்ப் பொய்கையில் நின்ற
நற்றவ முனியை நடாத்திக் கொணர்கெனச்

சிவனை இகழ்ந்த சிற்றறி வுடையோன்
அவனையான் சென்றிங்கு அழைத்திடேன் என்று

சிற்றிடை மடந்தையுஞ் சீறினள் ஆகி
மற்றைய மாதர் மதிமுகம் நோக்கி

நெற்றியிற் கண்ணுடை நிமலனுக்கு அல்லதென்
பொற்புஅமர் கொங்கை பொருந்துதற்கு அரிதால்

மானிட வேட மறையவன் தனக்கு
யான்வெளிப் படுவ தில்லையென்று இசைப்ப [90]

மலையிடை வந்த மாமுனி தன்னை
இணையடி தொழுதல் இளையோர்க்கு இயல்பெனத்

தந்தையுந் தாயுந் தகைபெற மொழியச்
சிந்தை குளிர்ந்து சீறுதல் ஒழிந்து

தாய்சொல் மறுத்தல் பாவமென்று அஞ்சி
ஆயிழை தானும் அவனெதிர் சென்று

சுற்றிவந்து அவனடி சுந்தரி வணங்கி
மற்றவன் தன்னை மனையிற் கொணர்ந்து

ஆதியம் பகவற்கு அன்பன் ஆகும்
வேதியன் பழைய விருத்தன் என்றெண்ணி [100]

ஆசனம் நல்கி அருக்கியம் முதலாப்
பாத பூசனைகள் பண்ணிய பின்னர்ப்

போனகம் படைத்துப் பொரிக்கறி பருப்புநெய்
ஆன்பால் மாங்கனி அழகிய பலாச்சுளை

தேன்கத லிப்பழஞ் சீர்பெறப் படைத்து
அந்தணன் தன்னை அமுதுசெய் வித்துச்

சந்தனங் குங்குமச் சாந்துஇவை கொடுத்துத்
தக்கோ லத்தொடு சாதிக் காயும்

கற்பூ ரத்தொடு கவின்பெறக் கொண்டு
வெள்ளிலை அடைக்காய் விளங்கிய பொன்னின் [110]

ஒள்ளிய தட்டில் உகந்து முன்வைத்துச்
சிவனெனப் பாவனை செய்து நினைந்து

தவமறை முனிவனைத் தாளினை வணங்கத்
தேனமர் குழலி திருமுக நோக்கி

மோனமா முனிபுன் முறுவல் காட்டிக்
கற்றைச் சடையுங் கரமொரு நான்கும்

நெற்றியில் நயனமும் நீல கண்டமும்
மானும் மழுவும் மலர்க்கரத்து இலங்கக்

கூன்மதி நிலவுங் கொழித்திட முடிமேல்
வரந்தரு முதல்வன் மடமயில் காணக் [120]

கரந்ததன் உருவங் காட்டி முன்நிற்ப
மரகத மேனி மலைமகள் தானும்

விரைவொடுஅங்கு அவன் அடி வீழ்ந்துஇறைஞ் சினளே
அரிஅயன் இந்திரன் அமரர் விஞ்சையர்

கருடர் கின்னரர் காய வாசியர்
ஏதமில் முனிவர் அவுணர் இராக்கதர்

பூதர் இயக்கர்கிம் புருடர் அலகை
சித்தர் தாரகைகந் தருவர்கள் முதலாய்க்

கணிக்கரும் பதினெண் கணத்தில் உள்ளவரும்
மணிக்கருங் களத்தனை வந்தடைந்து அதன்பின் [130]

மன்றல் அங் குழலிக்கு வதுவைநாள் குறித்துத்
தென்றல் வந்துஇலங்கு முன்றில் அகத்துப்

பொன்திகழ் பவளப் பொற்கால் நாட்டி
மாணிக் கத்தால் வளைபல பரப்பி

ஆணிப்பொன் தகட்டால் அழகுற வேய்ந்து
நித்தில மாலை நிரைநிரை தூக்கிப்

பக்திகள் தோறும் பலமணி பதித்துத்
தோரணம் நாட்டித் துகில்விதா னித்துப்

பூரணப் பொற்குடம் பொலிவுற வைத்துத்
திக்குத் தோறும் திருவிளக் கேற்றிப் [140]

பத்திப் படர்முளைப் பாலிகை பரப்பிக்
கன்னலுங் கழுகுங் கதலியும் நாட்டிப்

பன்மலர் நாற்றிப் பந்தர் சோடித்து
நலமிகு கைவலோர் நஞ்சணி மிடற்றனைக்

குலவிய திருமணக் கோலம் புனைந்தார்
வருசுரர் மகளிர் மலைமகள் தன்னைத்

திருமணக் கோலஞ் செய்தன ராங்கே
எம்பி ரானையும் இளங்கொடி தன்னையும்

உம்பர் எல்லாம் ஒருங்குடன் கூடிக்
கடலென விளங்கும் காவணந் தன்னில் [150]

[151 முதல் 199 வரை] [சிவன், உமை திருக்கல்யாணமும், விநாயகர் அவதாரமும் இதில் கவனிக்கத் தக்கது.]

சுடர்விடு பவளச் சுந்தரப் பலகையி்ல்
மறைபுகழ்ந்து ஏத்த மகிழ்ந்து உடன் இருத்திப்

பறையொ லியோடு பனிவளை ஆர்ப்ப
வதுவைக்கு ஏற்ற மறைவிதி நெறியே

சதுர்முகன் ஓமச் சடங்குகள் இயற்றத்
தறுகலன் ஒளிபொன் தாலி பூட்டிச்

சிறுமதி நுதலியைச் சிவன்கைப் பிடித்தபின்
அரிவலஞ் சூழ எரிவலம் வந்து

பரிவுடன் பரிமளப் பாயலில் வைகிப்
போதுஅணி கருங்குழற் பூவை தன்னுடனே [160]

ஓதநீர் வேலிசூழ் உஞ்சையம் பதிபுக
ஏரார் வழியில் எண்திசை தன்னைப்

பாரா தேவா பனிமொழி நீயென
வருங்கருங் குழலாள் மற்றும் உண் டோவெனத்

திருந்துஇழை மடந்தை திரும்பினாள் பார்க்கக்
களிறும் பிடியுங் கலந்துவிளை யாடல்கண்டு

ஒளிர்மணிப்பூணாள் உரவோ னுடனே
இவ்வகை யாய்விளை யாடுவோம் ஈங்கென

அவ்வகை அரனும் அதற்கு உடன் பட்டு
மதகரி யுரித்தோன் மதகரி யாக [170]

மதர்விழி உமைபிடி வடிவம் அதாகிக்
கூடிய கலவியில் குவலயம் விளங்க

நீடிய வானோர் நெறியுடன் வாழ
அந்தணர் சிறக்க ஆனினம் பெருகச்

செந்தழல் வேள்விவேத ஆகமம் சிறக்க
அறம்பல பெருக மறம்பல சுருங்கத்

திறம்பல அரசர் செகதலம் விளங்க
வெங்கரி முகமும் வியன்புழைக்கையோடு

ஐங்கர தலமு மலர்ப்பதம் இரண்டும்
பவளத்து ஒளிசேர் பைந் துவர்வாயுந் [180]

தவளக் கிம்புரித் தடமருப்பு இரண்டும்
கோடி சூரியர்போற் குலவிடு மேனியும்

பேழைபோல் அகன்ற பெருங்குட வயிறும்
நெற்றியில் நயனமும் முப்புரி நூலுங்

கற்றைச் சடையுங் கனகநீண் முடியுந்
தங்கிய முறம்போல் தழைமடிச் செவியுமாய்

ஐங்கரத்து அண்ணல் வந்துஅவ தரித்தலும்
பொங்கரவு அணிந்த புண்ணிய மூர்த்தியும்

மங்கை மனமிக மகிழ்ந்து உடன் நோக்கி
விண்ணு ளோர்களும் விரிந்த நான் முகனும் [190]

மண்ணு ளோர்களும் வந்துஉனை வணங்க
ஆங்குஅவர் தங்கட்கு அருள் சுரந்துஅருளித்

தீங்கது தீர்த்துச் செந்நெறி அளித்துப்
பாரண மாகப் பலகனி யருந்தி

ஏரணி ஆலின்கீழ் இனிதுஇரு என்று
பூதலந் தன்னிற் புதல்வனை யிருத்திக்

காதல்கூர் மடநடைக் கன்னியுந் தானும்
மைவளர் சோலை மாநகர் புகுந்து

தெய்வ நாயகன் சிறந்துஇனிது இருந்தபின்
வான வராலும் மானு டராலும் [200]


"பிள்ளையார் கதை" - 3

[201-400] [இந்தப் பதிவில், ஆவணியில் வரும் விநாயகர் சதுர்த்தி விரதமுறை சொல்லப்பட்டிருக்கிறது]

கானமர் கொடிய கடுவி லங்காலுங்
கருவி களாலுங் கால னாலும்

ஒருவகை யாலும் உயிர ழியாமல்
திரம்பெற மாதவஞ் செய்து முன்னாளில்

வரம் பெறுகின்ற வலிமை யினாலே
ஐம்முகச் சீயம்ஒத்து அடற்படை சூழக்

கைம்முகம் படைத்த கயமுகத்து அவுணன்
பொன்னுலகு அழித்துப் புலவரை வருத்தி

இந்நிலத் தவரை இடுக்கண் படுத்திக்
கொடுந் தொழில்புரியுங் கொடுமை கண்டு ஏங்கி [210]

அடுந்தொழிற் குலிசத்து அண்ணலும் அமரருங்
கறைபடு கண்டக் கடவுளைப் போற்றி

முறையிடக் கேட்டு முப்புர மெரித்தோன்
அஞ்சலீர் என்றுஅவர்க்கு அபயங் கொடுத்தே

அஞ்சுகைக் கரிமுகத்து அண்ணலை நோக்கி
ஆனைமா முகத்து அவுணனோடு அவன்தன்

சேனைகள் முழுவதுஞ் சிந்திடப் பொருது
குன்றுபோல் வளர்ந்த குறட்படை கூட்டி

வென்றுவா வென்று விடைகொ டுத்தருள
ஆங்குஅவன் தன்னோடு அமர்பல உடற்றிப் [220]

பாங்குறும் அவன்படை பற்றறக் கொன்றபின்
தேர்மிசை யேறிச் சினங்கொடு செருவிற்

கார்முகம் வளைத்த கயமுகா சுரன்மேல்
ஒற்றைவெண் மருப்பை ஒடித்து அவன் உரத்திற்

குற்றிட எறிந்தான் குருதிசோர்ந் திடவே
சோர்ந்த வன்வீழ்ந்து துண்ணென எழுந்து

வாய்ந்த மூடிகமாய் வந்துஅவன் பொரவே
வந்த மூடிகத்தை வாகனம் ஆக்கி

எந்தை விநாயகன் ஏறினன் இப்பால்
எறிந்த வெண்மருப்புஅங்கு இமைநொடி அளவில் [230]

செறிந்தது மற்றுஅவன் திருக்கரத் தினிலே
வெல்லவைக் கதிர்வேல் விழிபடைத்து அருளும்

வல்லவை தனைத்தன் மனைஎன மணந்தே
ஒகையோடு எழுந்துஆங்குஉயர்படை சூழ

வாகையும் புனைந்து வரும்வழி தன்னிற்
கருச்சங் கோட்டிக் கயல்கமுகு ஏறும்

திருச்செங் காட்டிற் சிவனை அர்ச்சித்துக்
கணபதீச் சுரம் எனுங் காரண நாமம்

கணபதி புகழ்தரு பதிக்குஉண் டாக்கிச்
சங்கரன் பார்ப்பதி தனிமன மகிழ [240]

இங்குவந்து அன்புடன் எய்திய பின்னர்க்
கணங்களுக்கு அரசாய்க் கதிர்முடி சூட்டி

இணங்கிய பெருமைபெற்றுஇருந்திட ஆங்கே
தேவர்கள் முனிவர் சித்தர் கந்தருவர்

யாவரும் வந்துஇவண் ஏவல் செய்திடுநாள்
அதிகமாய் உரைக்கும் ஆவணித் திங்களின்

மதிவளர் பக்கம் வந்திடு சதுர்த்தியில்
விநாயகற் குரிய விரதமென்று என்றெண்ணி

மனாதிகள் களித்து மரபொடு நோற்றார்
இப்படி நோற்றிட் டெண்ணிய பெறுநாள் [250]

ஒப்பரும் விரதத்துஉறும்ஒரு சதுர்த்தியில்
நோற்று நற்பூசை நுடங்காது ஆற்றிப்

போற்றி செய்திட்டார் புலவர் ஐங்கரனை
மருமலர் தூவும் வானவர் முன்னே

நிருமலன் குமரன் நிருத்தம் புரிந்தான்
அனைவருங் கைதொழுது அடிஇணை போற்ற

வனைகழற் சந்திரன் மனச்செருக்கு அதனால்
பேழைபோல் வயிறும் பெருத்த காத்திரமுந்

தாழ்துளைக் கையும் தழைமுறச் செவியுங்
கண்டனன் நகைத்தான் கரிமுகக் கடவுளுங் [260]

கொண்டனன் சீற்றம் குபேரனை நோக்கி
என்னைக் கண்டுஇங்கு இகழ்ந்தனை சிரித்தாய்

உன்னைக் கண்டவர் உரைக்கும் இத்தினத்திற்
பழியொடு பாவமும் பலபல விதனமும்

அழிவும் எய்துவர் என்று அசனிபோற் சபித்தான்
விண்ணவ ரெல்லாம் மிகமனம் வெருவிக்

கண்ணருள் கூருங் கடவுள் இத் தினத்திற்
கோரவெஞ் சினமிகக் கொண்டனன் அந்நாள்

மார்கழித் திங்கண் மதிவளர் பக்கஞ்
சதயந் தொட்ட சட்டிநல் விரதமென் [270]

இதயத்து எண்ணி யாவரும் நோற்றார்.
இப்புவி மாந்தர் இயம்பிய விரதம்

வைப்புடன் நோற்ற வகைஇனிச் சொல்வாம்
குருமணி முடிபுனை குருகுலத்து உதித்த

தருமனும் இளைய தம்பி மார்களுந்
தேவகி மைந்தன் திருமுக நோக்கி

எண்ணிய விரதம் இடையூ றின்றிப்
பண்ணிய பொழுதே பலிப்பு உண் டாகவுஞ்

செருவினில் எதிர்ந்த செறுநரை வென்று
மருமலர்ப் புயத்தில் வாகை சூடவும் [280]

எந்தத் தெய்வம் எவ்விர தத்தை
வந்தனை செய்யில் வருநமக்கு உரையெனப்

பாட்டுஅளி துதையும் பசுந்துழாய் மார்பனுங்
கேட்டருள் வீர் எனக் கிளர்த்துத லுற்றான்

அக்கு நீறணியும் அரன்முதல் அளித்தோன்
விக்கினந் தீர்க்கும் விநாயக மூர்த்தி

ஓடவைத் திடும்பொன் ஒத்துஒளி விளங்குங்
கோடி சூரியர்போற் குலவிய மேனியன்

கடகரி முகத்தோன் காத்திரம் பெருத்தோன்
தடவரை போலுஞ் சதுர்ப்புய முடையோன் [290]

சர்வா பரணமுந் தரிக்கப் பெற்றவன்
உறுமதிக் குழவிபோ லொருமருப் புடையோன்

ஒருகையில் தந்தம் ஒருகையிற் பாசம்
ஒருகையின் மோதகம் ஒருகையிற் செபஞ்செய்

உத்தம மாலையோன் உறுநினை வின்படி
சித்தி செய்வதனாற் சித்தி விநாயகன்

என்றுஇமை யவரும் யாவருந் துதிப்ப
நன்றி தரும்திரு நாமம் படைத்தோன்

புரவலர்க் காணப் புறப்படும் போதுஞ்
செருவினில் யுத்தஞ் செய்திடும் போதும் [300]

வித்தி யாரம்பம் விரும்பிடும் போதும்
உத்தி யோகங்கள் உஞற்றிடும் போதும்

ஆங்கவன் தன்னை அருச்சனை புரிந்தாற்
தீங்குஉறாது எல்லாஞ் செயம் உண் டாகும் [304]

கரதலம் ஐந்துக் கணபதிக்கு உரிய
விரதமொன்று உளதை விரும்பி நோற்றவர்க்குச்

சந்ததி தழைத்திடுஞ் சம்பத் துண்டாம்
புந்தியில் நினைந்த பொருள்கை கூடும்

மேலவர் தமையும் வென்றிட லாமெனத்
தேவகி மைந்தன் செப்பிடக் கேட்டு [310]

நுவலரும் விரதம் நோற்றிடு மியல்பும்
புகர்முகக் கடவுளைப் பூசை செய்விதமும்

விரித்தெமக்கு உரைத்திட வேண்டுமென்று இரப்ப
வரைக்குடை கவித்தோன் வகுத்துரை செய்வான்

தேருநீர் ஆவணித் திங்களின் மதிவளர்
பூர்வ பக்கம் புணர்ந்திடு சதுர்த்தியின்

முந்தும் புலரியின் முறைநீர் படிந்து
சந்தி வந்தனந் தவறாது இயற்றி
[புலரி=விடியல்]

அத்தினம் அதனில் ஐங்கரக் கடவுளைப்
பத்தியோடு அர்ச்சனை பண்ணுதல் வேண்டும் [320]

வெள்ளியாற் பொன்னால் விளங்கும் அவன்தன்
ஒள்ளிய அருள்திரு உருவுண் டாக்கிப்
[ஒள்ளிய=ஒளிவிளங்கும்]

பூசனை புரியப் புகன்றனர் பெரியோர்
ஆசுஇலா மண்ணால் அமைத்தலுந் தகுமால்
[ஆசு=குற்றம்]

பூசனஞ் செயுமிடம் புனித மாக்கி
வாசமென் மலரின் மஞ்சரி தூக்கிக்
[மஞ்சரி=பூங்கொத்து]

கோடிகம் கோசிகம் கொடிவிதா னித்து
நீடிய நூல்வளை நிறைகுடத்து இருத்தி
[கோடிகம், கோசிகம்=துணி, ஆடை]

விந்தைசேர் சித்தி விநாயக னுருவைச்
சிந்தையில் நினைந்து தியானம் பண்ணி [330]

ஆவா கனம் முதல் அர்க்கிய பாத்தியம்
வாகார் ஆச மனம்வரை கொடுத்து

ஐந்துஅமிர் தத்தால் அபிடே கித்துக்
கந்தம் சாத்திக் கணேச மந்திரத்தால்

ஈசுர புத்திரன் என்னும் மந்திரத்தால்
மாசுஅகல் இரண்டு வத்திரஞ் சாத்திப்

பொருந்துஉமை சுதனாப் புகலுமந் திரத்தால்
திருந்தும் பளிதத் தீபங் கொடுத்துப்
[பளிதம்=கற்பூரம்]

பச்சறுகு உடன் இரு பத்தொரு விதமாப்
பத்திர புட்பம் பலபல கொணர்ந்தே [340]

உமாசுதன் கணாதிபன் உயர்கரி முகத்தோன்
குமார குரவன் பாசாங் குசகரன்

ஏக தந்தன் ஈசுர புத்திரன்
ஆகு வாகனன் அருள்தரு விநாயகன்

சர்வ காரியமுந் தந்தருள் புரிவோன்
ஏரம்ப மூர்த்தி யென்னும் நாமங்களால்

ஆரம் பத்துடன் அர்ச்சனை பண்ணி
மோதகம் அப்பம் முதற்பணி காரந்

தீதுஅகல் மாங்கனி தீங்கத லிப்பழம்
வருக்கை கபித்த மாதுளங் கனியொடு

[வருக்கை=வருக்கைப்பலா, கபித்தம்=விளாம்பழம்] [350]

தரித்திடு நெட்டிலைத் தாழைமுப் புடைக்காய்
பருப்புநெய் பொரிக்கறி பால்தயிர் போனகம்

[நெட்டிலைத் தாழை=வெற்றிலை, முப்புடைக்காய்=[மூன்று பிரிவுகளை உடைய] தேங்காய்; பொரிக்கறி=புளியிடாமல் பொரித்த கறி; போனகம்=சோறு]

விருப்புள சுவைப்பொருள் மிகவும் முன்வைத்து
உருத்திரப் பிரியஎன்று உரைக்கும் மந்திரத்தால்

நிருந்தன் மகற்கு நிவேதனங் கொடுத்து
நற்றவர் புகன்ற நா னான்குஉப சாரமும்

[நானான்கு உபசாரம்= பதினாறு வகையான உபசார ஆவாஹனம், தாபனம், சந்நிதானம், ஸந்நிரோதனம், அவகுண்டனம். தேனுமுத்திரை, பாத்யம், ஆசமநியம், அர்க்யம், புஷ்பதானம்,தூபம்,தீபம்,சைவேத்யம்,பாநீயம்,ஜபஸமர்ப்பணை,ஆராத்திரிகம்.]

மற்றவன் திருவுளம் மகிழ்ந்திடச் செய்து
எண்ணுந் தகுதி இருபிறப் பாளர்க்கு

உண்அறு சுவைசேர் ஓதனம் நல்கிச்
சந்தன முத்துத் தானந் தக்கிணை
[தக்கிணை=தட்சணை] [360]

அந்தணர்க்கு ஈந்திட்டு அருச்சகன் தனக்குத்
திருத்தகும் விநாயகத் திருவுரு வத்தைத்

தரித்த வத் திரத்துடன் தானமாக் கொடுத்து
நைமித் திகம் என நவில்தரு மரபால்

[நைமித்திகம்= முறையாக விசேஷ காலங்களில் செய்யப்படும் விழா]

இம்முறை பூசனை யாவர் செய்தலும்
எண்ணிய கருமம் யாவையு முடிப்பர்

திண்ணிய செருவிற் செயம்மிகப் பெறுவர்
அரன் இவன் தன்னைமுன் அர்ச்சனை பண்ணிப்

[செரு=போர்]

புரமொரு மூன்றும் பொடிபட எரித்தான்
உருத்திரன் இவனை உபாசனை பண்ணி [370]

விருத் திராசுரனை வென்றுகொன் றிட்டான்
அகலிகை இவன்தாள் அர்ச்சனை பண்ணிப்

பகர்தருங் கணவனைப் பரிவுட னடைந்தாள்
தண்ணார் மதிமுகத் தாள் தமயந்தி
[பகர்=ஒளி]

அன்னான் இவனை அர்ச்சனை பண்ணி
நண்ணார் பரவு நளனை அடைந்தாள்

ஐங்கரக் கடவுளை அர்ச்சனை பண்ணி
வெங்கத நிருதரை வேரறக் களைந்து

தசரதன் மைந்தன் சீதையை யடைந்தான்
பகிரத னென்னும் பார்த்திவன் இவனை [380]

மதிதலந் தன்னின் மலர்கொடு அர்ச்சித்து
வரநதி தன்னை வையகத்து அழைத்தான்
[வரநதி=கங்கை]

அட்ட தேவதைகளும் அர்ச்சித்து இவனை
அட்ட போகத்துடன் அமிர்தமும் பெற்றார்

உருக்மணி யென்னும் ஒண்டொடி தன்னைச்
செருக்கொடு வவ்விச் சிசுபா லன்தான்

[ஒண்டொடி= ஒள்+தொடி= ஒளி பொருந்திய கைவளைகளை அணிந்தவள், [வவ்வு=கொள்ளையிடு, கவர்தல்]

கொண்டு போம் அளவிற் குஞ்சர முகனை
வண்டு பாண்மிழற்றா மலர்கொடு அர்ச்சித்துத்

[பாண்=கள்]

தாரியின் மறித்தவன் தனைப்புறங் கண்டு
யாமும் அங்கு அவளை இன்புறப் பெற்றோம் [390]

புகர்முகக் கடவுளைப் பூசனை புரிந்து
மிகமிக மனத்தில் விளைந்தன பெற்றார்

[புகர்முகம்=புள்ளிகள் நிறைந்த முகம் உடைய யானை]

இப்புவி தன்னில் எண்ணிலர் உளரால்
அப்படி நீவிரும் அவனை யர்ச்சித்தால்

எப்பொருள் விரும்பினீர் அப்பொருள் பெறுவீர்
என்றுகன் றெரிந்தோன் எடுத்திவை உரைப்ப

[கன்றெறிந்தோன்= திருமால், 'கன்று குணிலா எறிந்தோய் கழல் போற்றி']

அன்றுமுதல் தருமனும் அனுசரும் இவனைப்
பூசனை புரிந்து கட் புலன் இலான் மைந்தரை

[கட் புலன் இலான்= கண்பார்வை இல்லாத திருதாஷ்டிரன்]

நாசனம் பண்ணி நராதிபர் ஆகிச்
சிந்தையில் நினைத்தவை செகத்தினிற் செயங்கொண்டு [400]...!!!

Get this gadget at facebook popup like box
09